உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மன். வராக மூர்த்தியின் அவதாரமாகவே திகழக் கூடியவர். நிலத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய இந்த அம்மனை நிலம் தொடர்பான வேலை செய்பவர்கள் அனைத்தும் வழிப்பட வேண்டும். அப்படி அவர்கள் வழிபடும் பொழுது அவர்களுடைய தொழிலில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. மற்ற தொழிலை செய்பவர்களும் இந்த தெய்வத்தை வழிபடலாம்.
யார் ஒருவர் முழு மனதோடு இந்த தெய்வத்தை வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த தெய்வத்தை எந்த நாமாவளிகளை கூறி வழிபட்டால் சிறப்புகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வாராகி நாம வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான பெயர்கள் இருக்கும். அந்த தெய்வத்திற்குரிய 108 போற்றிகள், 1008 போற்றிகள் என்று பல போற்றிகள் இருக்கும். அம்மன் என்று கூறினால் அம்மனின் பல அவதாரங்கள் இருக்கும். அந்த அவதாரத்திற்குரிய பெயர்களை கூறி அந்த அம்மனை வழிபடும் பொழுது நமக்கு பலன் அதிக அளவில் கிடைக்கும். அதே போல் மகாலட்சுமி என்று பார்க்கும் பொழுது அஷ்ட லட்சுமிகளின் நாமத்தை கூறி வழிபட்டால் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல வகையான நாமங்கள் இருக்கின்றன. அந்த நாமங்களை நாம் முழுமனதோடு கூறும் பொழுது அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் வாராகி அம்மனின் நாமங்களை பற்றி பார்ப்போம்.
வாராகி அம்மனுக்கு உகந்த தினமாக கருதப்படுவது பஞ்சமி தினம். பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை மிகவும் எளிமையான முறையில் நாம் வழிபாடு செய்யலாம். தொடர்ந்து 8 பஞ்சமிகள் நாம் வாராகி அம்மனை ஏதாவது ஒரு வேண்டுதலை நினைத்துக் கொண்டு வழிபாடு செய்ய அந்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இதே போல் விவசாயம் செய்பவர்கள் விவசாயம் செய்யும் இடத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து அந்த அகல் விளக்கை வாராகி அம்மனாக நினைத்து வழிபட்டால் விவசாயம் செழிப்புடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதே போல்தான் நிலம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசைப்படுபவர்களாக இருந்தாலும் சரி, நிலத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆக இருந்தாலும் இந்த அம்மனை தொடர்ச்சியாக வழிபாடு செய்ய அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வைத்து மண்ணிற்கடியில் விளையக்கூடிய பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வது என்பது சிறப்பு.
மேலும் வாராஹி அம்மனுக்கு விரலி மஞ்சள் மாலை கட்டி அணிவிப்பதும் நல்ல பலனை தரும். வாராஹி அம்மனின் அப்படி வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனுக்குரிய நாமங்களையும் சேர்த்து நாம் உச்சரித்து வழிபட்டோம் என்றால் நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. பஞ்சமி தினத்தில் மட்டுமல்லாமல் தினமுமே வாராகி அம்மனின் இந்த நாமங்களை நாம் உச்சரிக்கும் பொழுது வாராகி அம்மன் நமக்கு உறுதுணையாக வந்து நம்மை காத்து ரசிப்பார்.
வாராஹி அம்மனின் நாமங்கள்
ஸ்ரீ தண்ட நாதாயை நமஹ
ஸ்ரீ தண்ட நாதேஸ்வரியை நமஹ
ஸ்ரீ சங்கே தாயை நமஹ
ஸ்ரீ சமேஸ்வரியை நமஹ
ஸ்ரீ சமய சங்கேத்தாயை நமஹ
ஸ்ரீ வாராகியை நமஹ
ஸ்ரீ போத்ரினியை நமஹ
ஸ்ரீ சிவாயை நமஹ
ஸ்ரீ வார்த்தாளி நமஹ
ஸ்ரீ மகா சேனா நமஹ
ஸ்ரீ ஆக்னா சக்ரேஸ்வரி நமஹ
ஸ்ரீ அரிக்னியை நமஹ
இதையும் படிக்கலாமே:ஆடி தேய்பிறை அஷ்டமி வழிபாடு
அம்மனின் இந்த நாமங்களை முழுமனதோடு வாராகி அம்மனை நினைத்து தினமும் அல்லது பஞ்சமி, அஷ்டமி போன்ற தினங்களிலோ வழிபாடு செய்ய வாராகி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு நம்முடைய வேண்டுதல்களும் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.