ரொம்பவும் மன பயம் இருக்க கூடிய சமயத்தில், சில மனிதர்கள் நம்முடன் இருந்தாலே ஏதோ ஒரு தைரியம் நம் மனதிற்குள் வந்துவிடும். சக மனிதன் கூட இருக்கும்போதே இவ்வளவு மன தைரியம் வருகிறது என்றால், அந்த முருகன் நமக்கு துணையாக வந்தால் எப்படி இருக்கும். உங்களுக்கு மன பயம் வரும் போது, பிரச்சனை வரும்போது, துணையாக முருகனை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், உங்களுக்கு துணையாக முருகன் கையில் இருக்கும் வேல் வரவேண்டும் என்றால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வாழ்க்கையில் எப்போதெல்லாம் உங்களுக்கு பயமும் பிரச்சனையும் வருகிறதோ அந்த இடத்திலேயே நின்று கண்களை மூடி இந்த பாடலை படிக்க வேண்டும். உங்கள் கண்முன்னே வேல் வந்து நிற்கும். உங்கள் பின்னே முருகப்பெருமான் கண்ணுக்குத் தெரியாமல் நிற்பார். யாராவது ஒரு மனித ரூபத்தில் வந்து உங்களுக்கான உதவியும் கிடைக்கும். கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போகும்.
மன பயம் நீக்கும் வேல் மந்திரம்
வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
சரிதானே, மன தைரியத்தை கொடுக்கும் பாடல் இதுதானே. இந்த பாடலை ஒருமுறை உச்சரிக்கும் போதே உடம்பு சிலிர்க்கிறது. முருகப்பெருமானே வந்து நம் உடம்புக்குள் புகுந்து ஏதோ செய்கின்றான். அந்த அளவுக்கு துணிச்சலும் தைரியமும் வந்துவிடும். கவலையே படாதீங்க. கஷ்டம் வந்தால் கந்த கடவுளை நினைத்துக் கொள்ளுங்கள்.
கஷ்டம் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ஓடியே போய்விடும். கலியுகத்தில் வரும் கஷ்டத்திற்கு தீர்வு தரத்தானே முருகப்பெருமான் அவதரித்துள்ளார். இனி கஷ்டம் வந்தால் துவண்டு போகக்கூடாது. இந்த பாடல் தான் உங்கள் நினைவுக்கு வரவேண்டும். முடிந்தால் தினமும் காலையில் எழுந்து பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு முருகா முருகா முருகா என்ற உள்ளம் உருக சொல்லி மேல் சொன்ன மந்திரத்தை உச்சரித்து விட்டு அன்றாட வேலையை தொடங்கி பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: வாராகி நாம வழிபாடு
உங்கள் வாழ்க்கையில் வேல் வேல் வெற்றிவேல் மட்டும்தான். நல்லதை நினைப்பவர்களுக்கு அந்த கந்த கடவுள் நல்லதை மட்டும் தான் செய்து கொடுப்பான் என்ற தகவல் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.