காலத்தால் வரக்கூடிய கஷ்டத்தை தீர்க்கக் கூடிய சக்தி கால பைரவருக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை என்றால் காலபைரவருக்கு உகந்த நாள். அதிலும் நாளை தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்து வந்திருப்பது இரட்டிப்பு பலனை கொடுக்கும். நாளை(28-07-2024) மாலை எல்லா கோவில்களிலும் பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடக்கும். அதில் கலந்து கொண்டு பைரவரை தரிசனம் செய்தாலே உங்கள் கஷ்டத்தில் பாதி முடிந்தது. காலமும் நேரமும் உங்களுக்கு நல்ல மாற்றங்களை கொடுக்கும்.
காலபைரவர் வழிபாட்டில் பின் சொல்ல கூடிய முறையையும் நீங்கள் பின்பற்றினால், ராஜ வாழ்க்கையை பெறலாம். கடன் சுமையிலிருந்து விடுபடலாம். நாளைய தினம் கஷ்டம் தீர்க்க செய்ய வேண்டிய பரிகாரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
நாளை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தபத்தாக குளித்து விடுங்கள். 1 கைப்பிடி முழு கோதுமையை கையில் எடுத்து உங்கள் தலையை மூன்று முறை சுற்றி காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டு விடுங்கள். நாளைய நாள் இதுபோல தொடங்கட்டும். நாளை மாலை பைரவர் கோவிலுக்கு செல்லவும். 5 மண் அகல்விளக்குகள் தனித்தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மண் அகல் விளக்கிலும் தனித்தனியாக நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பெண்ணை, ஐந்து விதமான எண்ணெய்களை ஊற்றி பஞ்சி திரி போட்டு விளக்கு ஏற்றி பைரவா எனக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும். ஐந்து எண்ணெய்களையும் ஒன்றாக கலக்கக் கூடாது. தனித்தனியாக ஒவ்வொரு அகல் விளக்கில் ஊற்றி இந்த தீபத்தை ஏற்றுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை தடுத்து நிறுத்தும் காவல் தெய்வமாக பைரவர் தான் இருக்க வேண்டும் என்று நினைத்து ‘ஓம் காவல்தெய்வமே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லவும். மந்திரத்தைச் சொல்ல எண்ணிக்கையில் கணக்கு வேண்டாம். ஐந்து நிமிடம் பைரவர் சன்னிதானத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொன்னாலே, நிச்சயம் மன நிம்மதி கிடைக்கும். கால பைரவர் உங்களோடு தான் இருக்கிறார் என்பதை உணர்வீர்கள்.
இதையும் படிக்கலாமே: மன பயம் போக்கும் முருகர் மந்திரம்
உங்களால் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது எனும் பட்சத்தில் வீட்டிலேயே எப்போதும் விளக்கு ஏற்றுவது போல ஏற்றி வைத்துவிட்டு, காலபைரவரை மனதார பிரார்த்தனை செய்து மந்திரத்தை சொன்னாலும் நிச்சயம் நல்ல பலன் உண்டு. பழமையான சிவன் கோவிலில் ஆகாஷ்ம சக்திகள் அதிகமாக இருக்கும். கூடுமானவரை வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் இந்த விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.