- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் நீங்க ஃபேஸ் பேக்

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் நீங்க ஃபேஸ் பேக்

- Advertisement -

பெண்கள் தங்களுடைய முகத்தை அழகாக காட்ட வேண்டும் என்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். முகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக திகழக்கூடியது தான் தேவையற்ற முடிகள். முகத்தில் ஆண்களைப் போல பெண்களுக்கும் மீசை, தாடி என்று தேவையற்ற இடங்களில் முடிகள் வளர்ந்திருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த முடிகளின் வளர்ச்சியால் தங்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு செய்யக்கூடிய பேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக பெண்களுக்கு ஆண்களைப் போல உதட்டிற்கு மேல் மீசையும், தாடைக்கு கீழ் தாடியும் வளர்வதுண்டு. இதற்கு ஹார்மோன் குறைபாடுகள் ஒரு முக்கியமான காரணமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினையும் சேர்ந்து வரும். அடுத்ததாக ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பிரச்சனை என்பது ஏற்படும். அதே போல் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் குறைவாக இருப்பதும் ஆண்களுக்கு உரிய ஹார்மோன் அதிகரிப்பதும் இந்த முடி வளர்ச்சிக்கு ஒரு காரணமாகவே திகழ்கிறது.

- Advertisement -

எதனால் இந்த முடி வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அதை சரி செய்வது தான் மிகவும் சிறந்த வழி. இதோடு சேர்த்து இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய சில மூலிகைகளை பயன்படுத்தி நாம் ஃபேஸ் பேக் செய்வதன் மூலமும் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்க முடியும். இதற்கு முதலில் குப்பைமேனி இலை பொடியை வாங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் அம்மன் பச்சரிசி பொடியையும் வாங்கிக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சரிசமமாக வாங்கி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது இதற்கு சரிசமமாக கஸ்தூரி மஞ்சள் தூளை இதனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கலந்த இந்த பொடியை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் உங்கள் முகத்தில் நீங்கள் ஃபேஸ் பேக் போட விரும்புகிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு பொடியை எடுத்துக்கொண்டு இதில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து எந்த இடத்தில் முடிகள் தேவையற்ற முடிகள் வளர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் சற்று கனமாக போட்டு விட வேண்டும்.

- Advertisement -

15 நிமிடம் கழித்து மறுபடியும் இதற்கு மேல் இதே பேக்கை போட வேண்டும். இப்படி இரண்டு முறை போட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை ஆவி பிடிக்க வேண்டும். இப்படி மேற் சொன்ன ஃபேஸ் பேக்கை போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் சருமத்துழைகள் விரிவடைந்து அதற்குள் இருக்கக்கூடிய முடிகள் உதிர்வதை நம்மால் காண முடியும். இதோடு மட்டுமல்லாமல் வசம்பு பொடி வாங்கி வைத்து அதை தேனில் கலந்து முகத்தில் இருக்கக்கூடிய முடிகளில் தடவ விரைவிலேயே அந்த முடிகள் வலுவிழந்து உதிரும்.

இதையும் படிக்கலாமே: தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர

தேவையற்ற முடிகள் வளர்ந்து விட்டது என்பதற்காக ஷேவிங் செய்வது வாக்சின் போடுவது போன்றவற்றை செய்வதற்கு பதிலாக இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய மூலிகை பொருட்களை வைத்து முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்கலாம்.

சற்று முன்