ஒருவருடைய முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதால் பிரச்சனைகள் உண்டாகும். அந்த முகப்பருக்கள் மறையும் பொழுது அது கரும்புள்ளிகளாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் முகத்தில் கருமை, மங்கு, கருத்திட்டுகள், சூரிய கதிர்களால் ஏற்படக்கூடிய கருமை என்று பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் நீக்குவதற்கு பல வகையான பொருட்களை உபயோகப்படுத்துவோம். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் ஒரே ஒரு ஐஸ்கியூப்பை வைத்து இந்த அனைத்து பிரச்சனைகளையும் எப்படி நீக்குவது என்றுதான் பார்க்கப் போகிறோம்.
ஒரே ஒரு பொருளை பயன்படுத்தி அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வழிமுறையை பின்பற்றலாம். இந்த வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகம் இளமையாகவும் பொலிவாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஐஸ்க்யூபை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு முதலில் நாம் ஒரு உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தக்காளியை கழுவி அதையும் ஒன்றிரண்டாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதுடன் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய கற்றாழையாக இருக்கும் பட்சத்தில் ஒரு கற்றாழை மடலை எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி கற்றாழை இல்லாத பட்சத்தில் கற்றாழை ஜெல்லை கடையிலிருந்து வாங்கியும் உபயோகப்படுத்தலாம்.
அப்படி கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதாக இருந்தால் மூன்று ஸ்பூன் அளவிற்கு அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி கற்றாழையை அந்த தக்காளி, உருளைக்கிழங்கு விழுதுடன் சேர்த்து மறுபடியும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் அந்த மிக்ஸியை திறந்து அதில் 1/4 ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் அளவிற்கு வேப்பிலை பொடி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து மறுபடியும் ஒருமுறை அரைக்க வேண்டும்.
இப்பொழுது விழுது தயாராகிவிட்டது. இந்த விழுதை ஐஸ் ஸ்டிரேயில் ஊற்றி ஐஸ் கியூப்பாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் ஒரு ஐஸ்கூப்பை எடுத்து நம்முடைய முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் கழுத்து கைகளிலும் மசாஜ் செய்து கொள்ளலாம். இப்படி தினமும் இந்த ஐஸ்க்யூபை நாம் மசாஜ் செய்வதன் மூலம் முகப்பருக்கள் நீங்கும். முகப்பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறையும். சூரிய ஒளி கதிர்களால் ஏற்பட்ட கருமை நீங்கும். கருத்திட்டுகள் நீங்கும். மங்கு நீங்கும். மேலும் முகத்தில் இருக்கக்கூடிய சருமத்துளைகள் இறுகி, இளமையான தோற்றத்தை பெற முடியும்.
இதையும் படிக்கலாமே வழுக்கை தலையில் முடி முளைக்க
இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இந்த அனைத்து பொருட்களும் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கும். மேலும் இளமையாக தோற்றமளிக்கவும் உதவி செய்யும். முயற்சி செய்து பாருங்கள்.