ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையை நிறைவான வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும். மேலும் அவர்களுடைய நியாயமான தேவைகளும் கோரிக்கைகளும் நிறைவேறும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை அமைந்தால் அதுவே நிறைவான வாழ்க்கையாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிறைவான வாழ்க்கையை பெறுவதற்கு புதன்கிழமை அன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர பரிகாரம்
ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படையில் அந்த கிழமை திகழ்கிறது. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கிரகங்கள் காரணமாக அமைகின்றன என்பதால் எந்த கிரகத்தால் நமக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதோ அந்த பாதிப்பை நீக்குவதற்கு அந்த கிரகத்திற்குரிய நாளில் நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
அந்த வகையில் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பவர்களும் சொந்தமாக வீடு வாசல் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் புதன் பகவானின் அருளை பெற வேண்டும். அப்படி புதன் பகவானின் அருளை பெற வேண்டும் என்றால் புதன்கிழமை அன்று ஒரு எளிமையான பரிகாரத்தை செய்ய வேண்டும். புதன்கிழமை என்பது பெருமாளுக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது.
அதனால்தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழியை நம்முடைய முன்னோர்கள் கூறி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு சிறப்பு மிகுந்த புதன்கிழமை அன்று நாம் இந்த முறையில் பரிகாரம் செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது செய்பவரை தவிர்த்து வேறு யாரும் இருக்கக்கூடாது. மற்ற அனைவரும் உறங்கச் சென்றிருக்க வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை வடக்கு பார்த்தவாறு தான் செய்ய வேண்டும். இதற்காக ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் இரவு படுத்து உறங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நான்கு கற்பூரத்தை வைத்து ஏற்ற வேண்டும்.
அந்த கற்பூரம் எரிய ஆரம்பித்ததும் அதில் நான்கு கிராம்பை போட வேண்டும். இது அனைத்தும் எரிந்து முடியும் வரை உங்களுடைய வேண்டுதலான கடன் பிரச்சினை தீர வேண்டும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற வேண்டுதலை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது மட்டும் அல்லாமல் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை நீங்கள் மனதார கூறலாம்.
இப்படி அந்த கற்பூரம் எரிந்து முடியும் வரை நீங்கள் கூற வேண்டும். கற்பூரம் எரிந்து முடிந்ததும் அந்த அகல் விளக்கை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். இப்படி தொடர்ச்சியாக 11 நாட்கள் கற்பூரம் மற்றும் கிராம்பை போட்டு யாருக்கும் தெரியாமல் எரித்து உங்களுடைய வேண்டுதலை நீங்கள் முன்வைக்கும் போது அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே:தடைபட்ட காரியம் தடை இல்லாமல் நடக்க செய்ய வேண்டிய தானம்
மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முதல் நாள் யார் செய்கிறார்களோ அவர்களே தான் தொடர்ச்சியாக 11 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை செய்கிறோம் என்பதை யாருக்கும் கூறக்கூடாது. வீட்டில் இருக்கும் நபர்களுக்கு கூட தெரியாமல் இந்த பரிகாரத்தை செய்தால் தான் இந்த பரிகாரத்தின் பலனை முழுமையாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.