- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி கடைசி செவ்வாய் துர்க்கை வழிபாடு

ஆடி கடைசி செவ்வாய் துர்க்கை வழிபாடு

- Advertisement -

இந்த வருடம் ஆடி மாதம் முடிவடையக்கூடிய தருணம் வந்துவிட்டது. அந்த வகையில் நாளைய தினம் இந்த வருடம், ஆடி மாதத்தில் வரக்கூடிய கடைசி செவ்வாய்க்கிழமை. துர்க்கை அம்மன் வழிபாட்டை இதற்கு முன்னால், இந்த ஆடி மாதத்தில் நீங்கள் செய்யவில்லை என்றாலும் சரி, நாளைய தினம் தவறாமல் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். நாளைய தினம் அம்பாளை நினைத்து எப்படி எல்லாம் வழிபாடு செய்யலாம் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

ஆடி செவ்வாய் துர்க்கை வழிபாடு

செவ்வாய்க்கிழமை என்றாலே அது துர்கை அம்மன் வழிபாட்டிற்கு மிக மிக சிறப்பானது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வேண்டுதல் வைத்தால் நிச்சயம் நம்முடைய வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும். நாளைய தினம் செவ்வாய்க்கிழமை 3:00 மணியிலிருந்து 4:30 மணி வரை ராகு கால நேரம்.

- Advertisement -

இந்த நேரத்தில் நாளைய தினம் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். எப்படி தெரியுமா? 3 வகைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஒன்று மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வது, இன்னொன்று எலுமிச்சம்பழம் மாலை போட்டு வழிபாடு செய்வது, இன்னொன்று எலுமிச்சம் பழம் விளக்கு போட்டு வழிபாடு செய்வது.

வீட்டு பக்கத்தில் இருக்கும் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று உங்கள் கையால் எலுமிச்சம் பழம் மாலையை கோர்த்து போடவும். 11, 21, 51 இப்படி உங்களுக்கு எத்தனை எலுமிச்சம் பழங்கள் வாங்க முடியுமோ, அதை வாங்கி கோர்த்து துர்க்கை அம்பாளுக்கு மாலையாக போட்டு குங்கும அர்ச்சனை செய்து உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். நீங்கள் வைத்த வேண்டுதலானது நிச்சயம் அடுத்த முப்பது நாட்களுக்குள் நிறைவேறும். இதை நீங்கள் செவ்வாய்க்கிழமை நாளைய தினம் ராகு கால நேரத்தில் செய்வது சிறப்பு.

- Advertisement -

வீட்டிலேயே நீங்கள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வது. மாவிளக்கு தயார் செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் அம்பாளின் படத்தை சுத்தம் செய்து பூ வைத்து வாழை இலையின் மேல் தயார் செய்த மாவிளக்கை வைத்து நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி 2 கொத்து வேப்ப இலைகளை வைத்து உங்களுடைய வேண்டுதலை சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டால், அந்த வேண்டுதலும் அடுத்த 30 நாட்களுக்குள் நிறைவேறும்.

இந்த மாவிளக்கை கோவிலுக்கு சென்றும் போடலாம் தவறு கிடையாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை தவறாமல் நாளைய தினம் மேற்கொள்ளவும். உங்களுடைய இல்லற வாழ்க்கை சிறக்கவும், வீட்டில் இருக்கும் சுப காரியத்தை விளக்கவும் கணவரின் ஆயுள் கூடவும் இந்த வழிபாடு வழிவகுக்கும்.

- Advertisement -

ஒரு சிலருக்கு துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழம் விளக்கு போட்டு வழிபாடு செய்யக்கூடிய வழக்கம் இருக்கும். ஆனால் ஒரு சிலர் இந்த விளக்கை போடக்கூடாது என்றும் சொல்கிறார்கள். அந்த விவாதத்திற்குள் இன்று நாம் செல்ல வேண்டாம். காலம் காலமாக உங்கள் குடும்பத்தில், உங்கள் பாட்டி, உங்கள் அம்மா, எல்லோரும் துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் எலுமிச்சம் பழம் விளக்கு போட்டு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவார்கள் என்றால், இந்த எலுமிச்சம் பழ விளங்கையும் நாளை நீங்கள் தாராளமாக கோவிலுக்கு சென்று துர்க்கை அம்பாள் முன்பாக ஏற்றலாம்.

நாளைய தினம் சக்தி வாய்ந்த ஒரு நாள். மேல் சொன்ன இந்த வழிபாடுகளில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து செய்தாலும் பல மடங்கு பலனை நீங்கள் பெறுவீர்கள். துர்கை அம்மன் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு

எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் சரி, துர்க்கை அம்மன் மனதார நினைத்து தாயே நீ தான் எனக்கும், என் குடும்பத்திற்கும் துணை என்று சொல்லி வழிபாட்டை செய்யுங்கள். நாளைய தினம் வரக்கூடிய இந்த செவ்வாய்க்கிழமையை தவற விட்டோம் என்றால், இந்த நாளுக்காக அடுத்த ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கும். ஆகவே இந்த வழிபாட்டை யாரும் தவறு விடக்கூடாது. அனைவருக்கும் துர்க்கை அம்மன் வழிபாடு செய்யக்கூடிய, வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சண்டை இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்