ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு காரியம் தடைப்பட்டு நிற்கும். அந்த காரியம் நடந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும். இருப்பினும் அந்த காரியத்தில் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு அது நடைபெறாமல் தள்ளிப் போய் கொண்டே இருக்கும். அப்படி தடைபட்டிருக்கும் காரியங்கள் தடையில்லாமல் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றால் அதற்காக செய்யக்கூடிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காரிய தடையை நீக்கக்கூடிய அற்புதமான கடவுளாக திகழக்கூடியவர் விநாயகர் பெருமான். அப்படிப்பட்ட விநாயகர் பெருமாளுக்கு பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. பல மந்திரங்கள் இருக்கின்றன. பல விரதங்களும் இருக்கின்றன. இருப்பினும் ஒரு சில மந்திரங்களும் வழிபாட்டு முறையும் விநாயகப் பெருமானுக்கு நாம் செய்யும் பொழுது அதனுடைய பலனை நம்மால் விரைவிலேயே பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான வழிப்பாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை என்றைக்கு வேண்டுமானாலும் நாம் ஆரம்பிக்கலாம். ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது இந்த வழிபாட்டையும் நாம் செய்ய ஆரம்பித்தோம் என்றால் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி வெற்றிகள் உண்டாக்கும். இதற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு விநாயகரின் படம் இருந்தால் போதும். அந்த படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இதில் நெய் ஊற்றியும் ஏற்றலாம், தேங்காய் எண்ணெய் ஊற்றியும் ஏற்றலாம். இவ்வாறு ஏற்றி முடித்துவிட்டு இரண்டு அருகம்புல்லை முதலில் விநாயகருக்கு சாற்றி விட்டு மீதம் இருக்கும் அருகம்புல்லை வைத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் பொழுது நாம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம்.
மந்திரம்
ஓம் சித்தி புத்தி லக்ஷ்ய லாப சஹித ஸ்ரீ கஜானனாய நமஹ
இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 21 முறை கூறி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அருகம்புல்லை வைத்து 21 முறை அர்ச்சனை செய்ய, எந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நினைத்த அர்ச்சனை செய்கிறோமோ அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் விலகி விரைவிலேயே அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும்.
முழு நம்பிக்கையுடன் விநாயகப் பெருமானை நினைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. வீட்டில் இந்த வழிபாட்டை செய்ய இயலாது என்பவர்கள் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை அங்கேயே அமர்ந்தும் கூறலாம்.
இதையும் படிக்கலாமே வரலட்சுமி விரதத்தன்று ஏற்ற வேண்டிய தீபங்கள்
மிகவும் அற்புதமான தெய்வமாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை நினைத்து இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் விரைவிலேயே காரிய வெற்றி உண்டாகும்.