- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுத்தி கூர்மையுடன் திகழ பரிகாரம்

புத்தி கூர்மையுடன் திகழ பரிகாரம்

- Advertisement -

நம்முடைய புத்தி கூர்மைக்கு காரணமாக திகழக்கூடிய நவகிரகங்களில் ஒருவராக இருப்பவர் புதன் பகவான். புதன் பகவான் ஒருவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு புத்தி கூர்மை என்பது அதிகரிக்கும். அதனால் அவர் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் புத்திசாலித்தனத்துடன் யோசித்து செயலாற்றுவார்கள். அதே சமயம் யாருக்காவது புதன் பகவானால் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் மற்றவர்கள் சாதாரணமாக செய்யும் செயலை கூட செய்ய முடியாமல் அறிவிழந்து திகழ்வார்கள். அப்படி புத்தி கூர்மை இல்லாத படிப்பில் சிறந்து விளங்காதவர்கள் புதன் பகவானை எந்த முறையில் வழிபாடு செய்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புத்தி கூர்மையுடன் திகழ பரிகாரம்

புத்திசாலித்தனத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் புதன் பகவான். அப்படிப்பட்ட புதன் பகவானுக்கு அதி தேவதையாக திகழக்கூடியவர் துர்க்கை அம்மன். அதனால் புதன்கிழமை அன்று துர்க்கை அம்மனை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் புதன் பகவானுக்குரிய கிழமையான புதன்கிழமை அன்று புதன் பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுதும் அதே சமயம் அவருக்குரிய தானங்களையும், பரிகாரங்களையும் செய்யும்பொழுது புதன் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

புதன் பகவானுக்குரிய நிறமாக திகழ்வது பச்சை நிறம். பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய காய்கறிகள், புற்களை, கீரைகள் போன்றவற்றை வாங்கி கோமாதாவிற்கு புதன்கிழமை புதன் ஹோரையில் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்து முடித்த பிறகு கோமாதாவின் வால் பகுதியை இரண்டு கைகளாலும் தொட்டு வணங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் புதன் பகவானின் அருள் கிடைக்கும்.

மேலும் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கும் நவகிரகங்களில் வீற்றிருக்கும் புதன் பகவானுக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து பச்சை பயறை புதன் பகவானுக்கு முன்பாக வைத்துவிட்டு பச்சை நிற துணியை வாங்கி கொடுத்துவிட்டு அவரை 108 முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் புதன் பகவானுக்கு பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய மலர்களை சாட்ட வேண்டும். பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய மலர் கிடைப்பது மிகவும் அரிது என்பதால் வில்வம், துளசி போன்ற மூலிகைகளை நாம் புதன் பகவானுக்கு அணிவிக்கலாம்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் புத்தி கூர்மையற்று திகழக்கூடியவர்கள் புதன்கிழமை அன்று ஒரு பச்சை நிற துணியில் அவர்களுடைய கைப்பிடி அளவு பச்சை பயிரை வைத்து மூட்டையாக கட்டி இரவு படுக்கச் செல்வதற்கு முன் தங்கள் தலையணைக்கு கீழ் வைத்து படுக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து அந்த துணியுடன் பச்சை பயிரை ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும். அப்படி ஓடுகின்ற நீர் இல்லாத பட்சத்தில் அந்த பச்சை பயிரை பறவைகளுக்கு தானமாக தரவேண்டும்.

இந்த வழிபாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் தொடர்ச்சியாக 16 வாரங்கள் நாம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் புதன் பகவானின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். புதன் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும். புத்தி கூர்மையுடனும் படிப்பில் சிறந்தும் விளங்க முடியும். இந்த வழிபாட்டையும் பரிகாரங்களையும் படிக்கும் பிள்ளைகள் செய்வதன் மூலம் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், அப்படி அவர்களால் செய்ய முடியாத பட்சத்தில் அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களை நினைத்து இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.

இதையும் படிக்கலாமே:கண் திருஷ்டியை நீக்கும் வீரகணபதி வழிபாடு

இந்த வழிமுறைகளில் எதை உங்களால் செய்ய முடியுமோ அதை தொடர்ச்சியாக 16 வாரங்கள் செய்து புதன் பகவானின் அருளை பரிபூரணமாக பெற்று புத்தி கூர்மையுடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்