ஆவணி மாதம் வரக்கூடிய அஷ்டமி திதியில் தான் கிருஷ்ணர் அவதரித்தார் என்பதால் அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கோகுலாஷ்டமி இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்த தினத்தில் வீட்டில் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கும். வைணவ குலத்தை சேர்ந்தவர்கள் அனைவருமே இந்த கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவார்கள். யாராக இருந்தாலும் கிருஷ்ணரை வழிபாடு செய்யும்பொழுது அதனால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி அன்று நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரமானது நம்முடைய குழந்தைகள் சிறப்பாக திகழ்வதற்கு அருள் புரியும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிள்ளைகள் நன்றாக இருக்க கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
வைணவ குலம் மட்டும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் தன்னை மறந்து ஒரு முறையாவது கிருஷ்ணா என்று கூறினால் அவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக கிருஷ்ணர் ஓடோடி வருவார். இது பல புராணக் கதைகளில் கூறப்பட்டிருக்கும் விஷயம் ஆகும். அவரை எந்த அளவிற்கு முழுமனதோடு அழைக்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர்த்து யார் அழைக்கிறோம் எதற்காக அழைக்கிறோம் என்பது கூட முக்கியம் கிடையாது. அவரை நம்பி ஒருமுறை கிருஷ்ணா என்று கூப்பிட்டு பாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் அனைத்துமே நீங்கிவிடும்.
கிருஷ்ணர் என்றதும் நம் நினைவிற்கு வருவது சிறு பாலகனாக இருந்து அம்மாவிடம் சேட்டை செய்து அடம் பிடிக்கும் கிருஷ்ணர் தான். அப்படிப்பட்ட கிருஷ்ணரை நாம் கிருஷ்ண ஜெயந்தி அன்று சிறு பாதம் வைத்து வீட்டிற்குள் அழைத்து வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது கிருஷ்ணர் நம் வீட்டிற்குள் வருவார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் அவருக்கு பிடித்தமான பலகாரங்களை செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுவார்கள்.
இந்த முறையில் கிருஷ்ண ஜெயந்தியை வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் கிருஷ்ண ஜெயந்தியை வழிபடும் வழக்கம் இல்லாதவர்களாக இருந்தாலும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றாலோ அல்லது தங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்பு ஏற்படுகிறது என்றாலோ குழந்தைகள் சொல் பேச்சு கேட்காமல் அடம் பிடிக்கிறார்கள் என்றாலோ அவர்கள் படிப்பின் சிறந்து விளங்க வேண்டும் என்றாலோ இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். பொதுவாக குழந்தைகள் தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த வேண்டுதலை கிருஷ்ணர் நிறைவேற்றுவார். அந்த பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று கடைக்கு சென்று வெண்ணெய் வாங்க வேண்டும். இந்த வெண்ணெயை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து கிருஷ்ணனை மனதார வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது குழந்தைகள் தொடர்பாக என்ன பிரச்சனை இருக்கிறதோ அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்துவிட்டு இந்த வெண்ணையை எடுத்துக் கொண்டு போய் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆறு வயதிற்குள் இருக்கும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
ஆறு வயதுக்குள் இருக்கக்கூடிய பெண் குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை, ஆண் குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை அந்த வெண்ணெயில் ஒரு சிறு துளி யாவது அவர்களுடைய நாக்கில் தடவி விட்டாலே போதும். வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு செய்யக்கூடாது. வீட்டிற்கு வெளியில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தான் இந்த வெண்ணையை தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கிருஷ்ண பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று குழந்தைகள் தொடர்பாக நாம் வேண்டிய வேண்டுதல் முழுமையாக நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷத்தை நீக்கி செல்வ வளத்தை அதிகரிக்கும் ஆவணி ஞாயிறு வழிபாடு
இந்த வெண்ணெய் பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் கிருஷ்ண பகவானே நினைத்து செய்பவர்களுக்கு அவர்களுடைய குழந்தைகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.