- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆபரண வசியம் ஏற்பட கிருஷ்ண ஜெயந்தி பரிகாரம்

ஆபரண வசியம் ஏற்பட கிருஷ்ண ஜெயந்தி பரிகாரம்

- Advertisement -

கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணர் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி இந்த கிருஷ்ண ஜெயந்தி என்பது வருகிறது. ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி அல்லது 27ஆம் தேதி இந்த இரண்டு தினங்களில் கிருஷ்ண பகவானை நினைத்து நாம் எந்த பொருட்களை வாங்கினால் நமக்கு தங்கம் அதிகளவில் சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கிருஷ்ண ஜெயந்தி பரிகாரம்

ஒருவருக்கு எவ்வளவு தான் பணம் இருந்தாலும் அதை தங்கமாக மாற்றி ஆபரணமாக உபயோகப்படுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆபரண யோகம் என்பது வேண்டும். தங்கம் வசியமாக இருக்க வேண்டும். அப்படி தங்கம் வசியமாகாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் எவ்வளவுதான் தங்கம் வாங்கினாலும் அது அவர்களிடம் தங்காமல் ஏதாவது ஒரு ரூபத்தில் வெளியே சென்று விடும். அதனால் முதலில் நாம் தங்கம் வாங்க வேண்டும், தங்க நகைகளை சேர்க்க வேண்டும் என்றால் தங்கத்தை வசியம் செய்ய வேண்டும். அதே சமயம் ஆபர்ண யோகம் என்பதும் இருக்க வேண்டும். இவை இரண்டையும் சேர்த்து பெறுவதற்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைக்கும் பழக்கம் என்பது பலருக்கும் இருக்கும். அன்றைய தினம் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களை வாங்கி வைத்து பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். இது ஒரு புறம் இருக்க கிருஷ்ணரை மனதார நினைத்துக் கொண்டு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். இதை தவிர்த்து தங்க நகை சேர்க்க வேண்டும், வீட்டில் தங்கம் தாராளமாக புலங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் கிருஷ்ண ஜெயந்தி அன்று சில பரிகாரங்களை செய்யலாம்.

இதற்கு குறிப்பிட்ட மூன்று பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை மட்டும் ஆவது வீட்டிற்கு வாங்கி வந்து வைத்தால் போதும். தங்கம் தாராளமாக வந்து சேரும். இந்த பொருளை ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்றோ ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றோ வாங்கலாம். அப்படி வாங்கக்கூடிய நேரம் ஆனது ராகு காலம் எமகண்டம் போன்ற நேரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதலில் நாம் வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பொருள் தங்கம். ஒரு சிறிய குண்டுமணி அளவாவது தங்கத்தை வாங்க இயன்றவர்கள் அன்றைய தினத்தில் வாங்கலாம். அப்படி தங்கம் வாங்கும் அளவிற்கு வசதி இல்லை என்பவர்கள் வெள்ளியால் செய்யப்பட்ட நாணயம் வாங்கலாம். வெள்ளியும் வாங்க இயலாது என்பவர்கள் விரலி மஞ்சள் வாங்கலாம்.

இந்த மூன்றில் எதை நம்மால் வாங்க முடியுமோ அதை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து கிருஷ்ண பகவானை பரிபூரணமாக நினைத்து அவரிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஆபர்ண யோகமும், தங்க வசியமும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:பிள்ளைகள் நன்றாக இருக்க கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு

மிகவும் அற்புதமான தெய்வமாக திகழக்கூடிய கிருஷ்ண பகவானை அவருக்குரிய தினமான கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்ய தங்கம் தாராளமாக வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்