நம்முடைய வீட்டில் காலையிலும் மாலையிலும் அன்றாடம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருந்துதான் வருகிறது. தினமும் இரண்டு வேளையும் விளக்கேற்ற முடியாதவர்கள் கூட ஒரு வேளையாவது விளக்கேற்றுவார்கள். தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் கூட வாரத்தில் முக்கியமான நாட்கள் ஆன செவ்வாய் வெள்ளி போன்ற கிழமைகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். விளக்கேற்றாத வீடு விருத்தி ஆகாது என்று கூறும் பழமொழியை கூட நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் நம்முடைய செல்வ செழிப்பு மேம்பட நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சகல செல்வமும் பெற ஏற்ற வேண்டிய தீபம்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வது உண்டு. சில மூலிகைகளை போட்டும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். நம்முடைய பிரச்சனைக்கு ஏற்றவாறு எந்த எண்ணெயில் தீபம் ஏற்றுகிறோம், எந்த திரியை போட்டு தீபம் ஏற்றுகிறோம் என்பதெல்லாம் இருக்கிறது. கோவிலுக்கு செல்லும் பொழுது எத்தனை எண்ணிக்கையில் தீபம் ஏற்றுகிறோமோ அதற்கேற்றார் போல் பலனும் நமக்கு கிடைக்கும்.
இப்படி தீபத்திலேயே பல வழிமுறைகளும் இருக்கின்றன. எந்த விளக்கில் தீபம் ஏற்றுகிறோம் என்பதை பொறுத்து கூட நம்முடைய வாழ்க்கையின் மாற்றம் என்பது ஏற்படும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வளவு அற்புதமான இந்த தீப வழிபாட்டை நாம் அனைவரும் கண்டிப்பான முறையில் தினமும் மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளும் பொழுது ஒரு சிறிய சூட்சமத்தை மட்டும் கையாண்டும் என்றால் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி சகல செல்வமும் நம்மை தேடி வரும் என்று கூறப்படுகிறது.
இதற்கு நமக்கு சுத்தமான மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தான் வேண்டும். எந்த திரியை வேண்டுமானாலும் இந்த தீபத்தை ஏற்று நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம் இதற்கு துளசி பொடி மற்றும் தசங்க பொடி இவை இரண்டும் வேண்டும். இரண்டும் சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் துளசி பொடியை எடுத்துக் கொண்டால் ஒரு ஸ்பூன் தசங்க பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் தேங்காய் எண்ணெயில் நன்றாக கலந்து அந்த எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி நாம் தீபம் ஏற்றும்பொழுது துளசி பொடி ஆனது நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களையும் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லைகளையும் அதோடு மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அருளை பெறுவதற்கும் உதவும். தசங்க பொடியை பற்றி கேட்கவே வேண்டாம். அதனுடைய நறுமணம் நம்முடைய வீட்டில் பரவுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் என்பது ஏற்படும். தசங்க பொடியானது அனைத்து தெய்வங்களையும் வசியம் செய்யக்கூடிய ஒரு அற்புத பொடியாக திகழ்கிறது.
இதையும் படிக்கலாமே:அதிர்ஷ்டத்தை தரும் அண்ணாச்சி பூ
இந்த இரண்டு பொடிகளையும் சேர்த்து நாம் தீபம் ஏற்றி தினமும் வழிபாடு செய்யும் பொழுது அனைத்து தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும். முக்கியமாக மகாலட்சுமியின் அருளைப் பெற முடியும் அதனால் நம்மை தேடி செல்வங்கள் வந்து சேரும்.