- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉண்டியலில் பணம் சேர சரியான நேரம் என்ன?

உண்டியலில் பணம் சேர சரியான நேரம் என்ன?

- Advertisement -

உண்டியலில் பணம் சேர்ப்பது காலம் காலமாக நாம் எல்லோரும் கடைபிடித்து வரும் நல்ல பழக்கங்களில் ஒன்று. நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த இந்த விஷயத்தை, அடுத்தடுத்த சந்ததியினருக்கும் நாம் சொல்லிக் கொடுத்து வருகிறோம். உண்டியலில் பணம் சேர்க்க சரியான நேரத்தையும் சொல்லிக் கொடுத்தால் பணமானது குறையாமல் பெருகும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான நேரம் என்ன? எனும் ரகசியத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

பண்டமாற்று முறை சென்று, பணமாற்று முறை வந்தது. அன்றிலிருந்து பணம் கொடுத்தால் தான் எதுவும் கிடைக்கும் என்கிற நிலை இன்றளவிலும் தொடர்கிறது. இத்தகைய பணத்தை சேர்க்கத் தான் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜோதிட மற்றும் ஆன்மீக ரீதியாக சில நேரத்தில், சிலவற்றை செய்யும் பொழுது அதற்கான பலன்களும் காணக் கிடைக்கிறோம்.

- Advertisement -

சரியான நேரத்தை தவறவிட்டால் திரும்பவும் அது கிடைக்காது என்பார்கள். சகுனம் பார்க்காவிட்டாலும் நேரம் பார்த்தால் நல்லதே நடக்கும். எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ, அதைத்தான் செய்ய வேண்டும். நீங்கள் நல்லதே செய்தாலும் கெட்டதாக முடிவதற்கு இந்த நேரமும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக சந்திராஷ்டமம் எடுத்துக் கொள்ளலாம்.

சந்திராஷ்டம நேரத்தில் நாம் கெட்டது செய்தாலும், நல்லது செய்தாலும் சில சமயங்களில் நமக்கு எதிராக திரும்பும். அந்த நேரத்தில் வாயை மூடிக் கொண்டு மௌன விரதம் இருப்பது நல்லது என்பார்கள். அந்த அளவிற்கு நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம் சாஸ்திரங்களில், பணம் சேரவும் நல்ல நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரகசியம் தெரிந்தவர்களுக்கு குபேர யோகம் ஜாக்பாட் அடித்தது போல அடிக்கும்.

- Advertisement -

பொதுவாகவே குளிகை நேரத்தில் எதை செய்தாலும் சாஸ்திர ரீதியாக அது பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம். குளிகை நேரத்தில் பணமோ, பொருளோ, நகையோ, செயலோ எது செய்தாலும், வாங்கினாலும் அது பன்மடங்கு நமக்கு சேரும். அதனால் தான் அந்த நேரத்தில் கடன் வாங்குவது மற்றும் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திரும்பத் திரும்ப செய்யக் கூடிய ஒரு காரியத்தை குளிகை செய்யும்.

குளிகை நேரத்தில் பணம் சேர்த்தால், பணம் பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. குளிகை நேரத்தில் பணம் சேர்த்தால் அது பன்மடங்கு பெருகி குபேர சம்பத்தை கொடுக்கும். அளவில்லாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். நம்முடைய வீட்டு கேலண்டரில் குளிகை நேரம் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் தினமும் உண்டியலில் பணம் சேர்த்துக் கொண்டே வாருங்கள். உங்களால் முடிந்த தொகையை போடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இன்ஸ்டன்ட் தக்காளி கடையல் செய்வது எப்படி?

இந்த நேரத்தில் பணம் சேர்க்க குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். தொடர்ந்து இதே முறையில் குளிகை நேரத்தில் 8 மாதங்கள் நீங்கள் உண்டியலில் பணம் போட்டு வர, அந்த உண்டியலில் இருக்கும் பணமானது சில நல்ல சுபகாரியங்களுக்கு உங்களுக்கு பயன்படும். மேலும் பணமானது வீண் விரையத்திற்கு செலவழியாது. இப்படி பணம் சேர்க்கும் பொழுது தொண்டு காரியங்களுக்கு முதலில் செலவு செய்யுங்கள், ஒரு ரூபாயாவது தான, தர்மம் செய்துவிட்டு பிறகு நீங்கள் செலவழித்து பாருங்கள். நீங்கள் வேண்டாம் என்றாலும் குபேர யோகம் உங்களை துரத்திக் கொண்டு வரும்.

சற்று முன்