ஒருவருடைய வாழ்க்கை நிறைவு பெறுகிறது என்னும் பட்சத்தில் அவருக்கு கண்டிப்பான முறையில் குடும்பம் என்ற ஒன்று இருக்க வேண்டும். குடும்பம் இல்லாதவரை முழு மனிதன் என்று கூற முடியாது. அப்படி குடும்பம் என்ற ஒன்று வேண்டுமென்றால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும். வாழ்க்கைத் துணை அமைவது என்பது மிகப்பெரிய பாக்கியம் என்று தான் கூற வேண்டும்.
இன்றைய காலத்தில் அந்த பாக்கியத்தை பலராலும் பெற முடியவில்லை. இதற்கு மனதை புரிந்து கொள்ளாமல் சண்டை போடுவது தான் முக்கியமான காரணமாக தெரிகிறது. எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கொண்டு கோபித்துக் கொண்டு உன்னை நம்பி நான் இல்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போடும் நபர்களே அதிகமாக இருக்கிறார்கள். எந்த முறையில் சண்டை போட்டாலும் அந்த சண்டைகள் நீங்கி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று நினைத்தால் நாளைய தினத்தில் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் எழுதினால் போதும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ராமரும் சீதையும் போல ஒற்றுமையுடன் வாழ வழிபாடு
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய கடவுளாக சில கடவுள்கள் இருப்பார்கள். அதேபோல் ஒவ்வொரு திதிக்கும் உரிய கடவுளாக ஒவ்வொரு கடவுள் இருப்பார்கள். அந்த திதிக்கும் நட்சத்திரத்திற்கும் ஏற்றார் போல் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்மை போல ஒரு பாக்கியசாலி யாராகவும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு அற்புதமான ஆற்றல் கொண்டதாக தான் இந்த திதிகளும் நட்சத்திரங்களும் திகழ்கின்றன.
அந்த வகையில் நாளைய தினம் காலை 7:30 மணி வரை அஷ்டமி பிறகு நவமி ஆரம்பிக்கிறது. அதேபோல் நாளை இரவு 8:54 வரை ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. நவமி என்பது ராமருக்குரிய திதி என்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் ரோகிணி நட்சத்திரமும் பெருமாளுக்குரிய நட்சத்திரமாகவே கருதப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய நாள் நாளை என்பதால் நாளைய தினம் மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது.
அன்றைய தினம் இயன்றவர்கள் அருகில் இருக்கும் ராமர் ஆலயத்திற்கு அல்லது பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலையும் தாமரை பூவும் வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி ஆலயத்திற்கு செல்ல முடியாது என்பவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய ராமர் படத்திற்கோ, பெருமாளின் படத்திற்கோ துளசி இலையை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
இதோடு ராமபிரானுக்கே உரிய மந்திரமான “ஸ்ரீ ராம ஜெயம்” என்னும் மந்திரத்தை 111 முறை எழுத வேண்டும். இப்படி எழுதும் பொழுது நமக்கு எந்தவித கவனச் சிதறலும் இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க ராமபிரானையே நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை எழுத வேண்டும். எந்தவித தொந்தரவும் இல்லாமல் அமைதியான இடத்தில் இந்த மந்திரத்தை எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்த பிறகு இந்த பேப்பரை அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்தின் உண்டியலில் மறுநாள் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும்.
இந்த மந்திரத்தை எழுதி முடித்த பிறகு அதை அப்படியே கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய உள் மனதில் ராமரையும் சீதையும் மனதார நினைத்து உருவகப்படுத்திக் கொண்டு உங்களைப்போல் நாங்களும் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி அன்று கூற வேண்டிய மந்திரம்
இந்த எளிமையான வழிபாட்டு முறையை நாளைய தினம் பின்பற்றும் தம்பதிகள் கண்டிப்பான முறையில் எந்தவித சண்டைகளும் இல்லாமல் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.