- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர சனி மகா பிரதோஷ வழிபாடு

கடன் தீர சனி மகா பிரதோஷ வழிபாடு

- Advertisement -

இந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாள் 31.8.2024 சனிக்கிழமையோடு சேர்ந்து பிரதோஷமும் வரவிருக்கின்றது. சனி பிரதோஷம் என்றால் சிறப்பு வாய்ந்த நாள் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த நாளில் கட்டாயம் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை அனைவரும் வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாளில் சிவன் வழிபாட்டை யாரும் தவற விடாதீர்கள்.

உங்களுடைய கடன் சுமை குறையவும், குடும்பம் சுபிட்சம் பெறுவும், செல்வ வளத்தில் உயரவும், நாளைய தினம் செய்ய வேண்டிய எளிமையான சிவன் வழிபாட்டை பற்றிய தகவலைத்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சனி மஹா பிரதோஷ வழிபாடு

பிரதோஷ நேரம் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை. எவ்வளவு வேலை இருந்தாலும் சிவபெருமானுக்காக இந்த நேரத்தில் இருந்து ஒரு 20 நிமிடத்தையாவது ஒதுக்கி கோவிலுக்கு சென்று சிவன் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுவது மிக அற்புதமான பலனை கொடுக்கும். நந்தி தேவருக்கு ஒரு கட்டு அருகம்புல் வாங்கி கொடுத்து விடுங்கள்.

சிவபெருமானுக்கு வில்வ இலை வாங்கி கொடுங்கள். குறைந்தபட்சம் இந்த 2 பொருளையும் வாங்கிக் கொடுத்தால் போதுமானது. அதற்கு மேலே அபிஷேகத்திற்கு தேவையான பொருள், பழம், தேங்காய் உடைப்பது, எல்லாம் உங்களுடைய சௌகரியம். உங்களுடைய நிதி நிலைமையை பொருத்து வழிபாட்டை மேற்கொள்ளவும்.

- Advertisement -

கட்டாயம் கோவிலுக்கு சென்றால் விளக்கு போடும் பழக்கம் இருக்க வேண்டும். இல்லை என்றால் அங்கு இருக்கும் அகண்ட தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றுங்கள். அதுவும் இல்லை என்றால் 1/2 லிட்டர் நல்லெண்ணெய் வாங்கி கோவிலுக்கு தானம் கொடுங்கள்.

கடன் சுமையிலிருந்து வெளிவர, நாளைய தினம் சிவபெருமானுக்கு வெண் பொங்கல் நெய்வேதியும் வைக்க வேண்டும். வீட்டிலிருந்தே உங்கள் கையால் வெண்பொங்கல் செய்து கொண்டு போய் சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து அர்ச்சனை செய்து, அதை கோவிலுக்கு வெளியில் யாசகம் கேட்பவர்களுக்கு தானம் கொடுப்பது மிக மிக சிறப்பு.

- Advertisement -

கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கும் இந்த வெண்பொங்கலை நீங்கள் தானமாக கொடுக்கலாம். இருந்தாலும் நல்ல சாப்பாடு சாப்பிட வழியில்லாமல், பசியோடு இருக்கும் யாசகர்களுக்கு இந்த வெண் பொங்கல் தானம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. சில கோவில்களில் நாம் செய்து கொண்டு போகும் பிரசாதத்தை கோவிலுக்குள் அனுமதி செய்ய மாட்டார்கள்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்கி செல்வம் பெருக பரிகாரம்

அப்படி என்றால் ஒரு தொகையை கட்டளையாக குருக்களிடம் பணம் கொடுத்து விடுங்கள். அந்த தொகைக்கு அவர் வெண்பொங்கல் செய்து கோவிலில் பிரசாதமாக விநியோகம் செய்ய உங்களுக்கு உதவி செய்வார். இதுபோல எப்படியாவது நாளைய தினம் மிளகு போட்ட வெண்பொங்கலை சிவன் கோவிலில் உங்கள் கைகளால் அன்னதானம் செய்து விட்டால் போதும். அது உங்களுடைய கடன் சுமையை படிப்படியாக குறைத்து விடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

சற்று முன்