- Advertisement -

நகை கடன் தீர வழிபாடு

- Advertisement -

ஒவ்வொருவரும் தங்களுடைய இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் என்பதை வாங்கி விடுகிறார்கள். பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து பணத்தை கடனாக வாங்குவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் இன்னும் சிலர் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த தங்க நகையை அடமானத்தில் வைத்து அதன் மூலம் கடன் வாங்குவார்கள். இப்படி நகையை அடமானம் வைத்து கடன் வாங்குபவர்கள் சிறிது சிறிதாக பணத்தை கட்டி திருப்பி விடுவோம் என்று முயற்சியும் செய்வார்கள்.

இந்த முயற்சியில் பலர் வெற்றியடைந்தாலும் ஒரு சிலரால் வெற்றி பெற முடியாத சூழ்நிலை இருக்கும் .அப்படிப்பட்ட சூழ்நிலையில் அடமானத்தில் வைத்த தங்க நகை மூழ்குவதற்குரிய வாய்ப்புகள் கூட ஏற்படும். இந்த சூழ்நிலையிலும் நாம் நம்முடைய முயற்சியை விடாமல் மேற்கொள்வதோடு மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபட்டால் மூழ்கும் சூழ்நிலையில் இருக்கும் தங்க நகையும் திரும்ப கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நகை கடன் தீர வழிபாடு

ஒருவருக்கு தங்க நகை சேர வேண்டும் என்றால் சுக்கிரனின் அம்சம் என்பது இருக்க வேண்டும். அதே சமயம் குருவின் அம்சமும் இருக்க வேண்டும். குரு கேதுடன் சேர்ந்து இருந்தாலும் அல்லது சுக்கிரன் கேதுடன் சேர்ந்திருந்தாலோ அவர்களுக்கு தங்க நகைகளை அடமானத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் அல்லது பிறரிடம் கொடுத்து ஏமாறக்கூடிய சூழ்நிலை உண்டாக்கும். இந்த கிரக சேர்க்கையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து வெளியே வருவதற்கும் அதே சமயம் அடமானத்தில் இருக்கும் தங்க நகையை திருப்புவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான சூட்சமமான வழிபாட்டு முறை.

சுக்கிர பகவானின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும் அதேசமயம் சுக்கிரன் குரு போன்றவர்களின் அருளை பெறுவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இதில் நாம் சுக்ர பகவானின் அருளை பெற வேண்டும் என்பதால் சுக்கிர ஹோரையில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு நாளும் சுக்கிர ஹோரை என்பது வரும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை என்பதை உச்ச சுக்கிரன் என்று கூறுவோம். குரு பகவானுக்குரிய கிழமையாக வியாழக்கிழமை திகழ்கிறது. அந்த கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையை நாம் குரு சுக்கிர பலன் பெற பயன்படுத்திக் கொள்ளலாம். புதன்கிழமை வரக்கூடிய சுக்கிர ஹோரையை நாம் புத சுக்கிர யோகம் பெற பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதன் மூலம் சுக்கிர யோகத்தை பெற முடியும். இவர்களின் யோகத்தை பெற்று விட்டாலே தங்க நகைகள் நம்மிடம் தாராளமாக சேர ஆரம்பிக்கும்.

இந்த நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு 27, 54, 108, 1008 என்றால் எண்ணிக்கையில் உடையாத நல்ல ஏலக்காயாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்களின் கடன் தொகைக்கு பொருத்தவாறு அதே சமயம் உங்களின் பொருளாதாரத்தை பொருத்தவாறு நீங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். சரியாக சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் பொழுது பச்சை நிற நூலால் எடுத்து வைத்திருக்கும் ஏலக்காயை மாலையாக கோர்த்து அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமி ஆலயத்திற்கு சென்று மகாலட்சுமி தாயார் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:

இப்படி புதன், வியாழன், வெள்ளி இந்த மூன்று கிழமையும் சுக்கிர ஹோரையில் ஏலக்காய் மாலையை கொண்டு சென்று மகாலட்சுமி தாயாருக்கு கொடுத்து வழிபாடு செய்வதன் மூலம் எப்பேர்ப்பட்ட கிரக தோஷத்தால் நகை கடன் ஏற்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் படிப்படியாக நீங்கி விரைவிலேயே அடமானத்தில் இருக்கும் நகைகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும் என்ற தகவலை இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்