கடன் தொல்லையில் இருந்து விடுபட, எதிரி தொல்லையில் இருந்து விடுபட, கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, இந்த கால பைரவர் வழிபாடு நமக்கு வழி வகுக்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். உங்களுடைய வீட்டில் கண் திருஷ்டி பிரச்சனை அதிகமாக இருக்கிறது. எதிர்மறை ஆற்றலின் தாக்கம் இருக்கிறது.
அடுத்தவர்களுடைய பொறாமை எண்ணத்தால் உங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் வருகிறது. உங்கள் வீட்டை பாதுகாக்க காவல் தெய்வமாக அந்த கால பைரவரையே அழைக்க வேண்டும் என்றால் இன்றைய தினம் அதற்கான நாள். இன்று வளர்பிறை அஷ்டமி திதி. காலபைரவரை நினைத்து வீட்டில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வீட்டை பாதுகாக்க அந்த கால பைரவனே வந்து நிலை வாசலில் அமர்ந்து கொள்வான். அந்த பரிகாரம் என்ன நாமும் செய்து பலனடைய வேண்டும் என்றால் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
வளர்பிறை அஷ்டமி திதி பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை 1 எலுமிச்சம் பழம். 8 மிளகு. ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு பாதி எலுமிச்சம் பழத்தில் 4 மிளகுகளை வைத்து விடுங்கள். இன்னொரு பாதி எலுமிச்சம் பழத்தில் நான்கு மிளகுகளை வைத்து விடுங்கள். எலுமிச்சம் பழத்திற்கு மேலே மிளகை அழுத்தி வைத்தாலே நிற்கும்.
வட்டமாக இருக்கும் எலுமிச்சம் பழத்தில் நான்கு திசைகளில், நான்கு மிளகு வைக்க வேண்டும். தயார் செய்த இந்த எலுமிச்சம் பழத்தை அப்படியே கொண்டு போய் உங்கள் நிலை வாசலில் வைத்து விடுங்கள். இரண்டு பக்கமும் நிலை வாசலில் வைக்க வேண்டும். ஒரு பாதி எலுமிச்சம் பழம் ஒரு பக்கம், இன்னொரு பாதி எலுமிச்சம்பழம் இன்னொரு பக்கம்.
திருஷ்டி கழிக்க எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி வைப்போம் அல்லவா, அதே போல தான் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து விட்டு நிலை வாசலிலேயே நின்று பைரவரை மனதார பிரார்த்தனை செய்து. ‘ஓம் காவல் தெய்வமே போற்றி போற்றி’ என்ற இந்த மந்திரத்தை 27 முறை சொல்லி, ‘பைரவா நீ தான் எங்கள் வீட்டிற்கு காவல் தெய்வமாக நிற்க வேண்டும்.
உன்னை நம்பி தான் என்னுடைய குடும்பமே இருக்கிறது’ என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இன்று இரவு 8 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை நீங்கள் செய்துவிட வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். கால பைரவரை இப்படி அழைத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டிற்கு கால பைரவர் வருவார் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட செல்ல வேண்டிய ஆலயம்
நம்பிக்கையோடு அழைத்தால் எந்த தெய்வமாக இருந்தாலும் நிச்சயம் வரும். அதே போல தான் சிவனின் மறு அம்சமாக இருக்கும் இந்த கால பைரவரையும் இன்று நாம் நம்பிக்கையோடு அழைப்போம். அவருக்கு உகந்த மிளகு பரிகாரத்தில் பயன்படுத்தி இருக்கின்றோம். இந்த மிளகு கால பைரவருக்கு மிக மிக உகந்தது. தேவலோக கனியான எலுமிச்சம் பழத்தோடு அந்த மிளகு சேர்ந்து உங்களுடைய நம்பிக்கையும் இதனோடு சேர்ந்து அந்த கால பைரவரின் ஆசீர்வாதத்தையும் காவலையும் உங்களுக்கு பெற்று தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.