பூஜை செய்யும் போது நாம் சொல்லக்கூடிய வார்த்தைகளுக்கு சக்தி மிக மிக அதிகமாக இருக்கும். கடவுளிடம் கேட்கும் போது சில சூட்சுமங்களை அறிந்து கொண்டு சரியான முறையில் கேட்டால் நாம் கேட்டவரம், கேட்டபடி உடனே கிடைக்கும். இன்று வெள்ளிக்கிழமை எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமி தாயை நினைத்து வழிபாடு செய்யவோம். பெரிய அளவில் பூஜை செய்யவில்லை என்றாலும், பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி கற்பூர ஆரத்தி காண்பிப்போம்.
நம்முடைய எல்லோர் தேவைகளும் என்னவாக இருக்கிறது. பணம், இந்த பணம்தான் இன்று நம்மை ஆட்டி வைக்கிறது. பணம்தான் நம்மை ஆளுகிறது. இந்த பண பிரச்சனையிலிருந்து வெளிவர அளவில்லா பணத்தை பெற, இன்று பூஜையின் போது நாம் சொல்ல வேண்டிய வார்த்தை என்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பணம் தரும் மந்திர வார்த்தை
இன்று மகாலட்சுமிக்கு கற்பூர ஆரத்தி காட்டிவிட்டு, முதலில் பணம் பணம் பணம் என்று மூன்று முறை உங்கள் வாயால் சொல்லி விடுங்கள். பிறகு ‘அளவில்லாத பணம் என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது’ என்று சொல்லுங்கள். மூன்று முறை அல்ல இந்த வார்த்தைகளை வெள்ளிக்கிழமை பூஜையின் போது 30 முறை சொன்னாலும் தவறு கிடையாது. நாம் சொல்லுவதுதான் நமக்கு நடக்கும்.
அதிலும் பூஜை செய்யும் போது கடவுளிடம் நாம் என்ன கேட்கிறோமோ அதை உடனே அவர் கொடுத்து விடுவார். கடன் கடன் என்று சொல்லி பூஜை செய்தால் நமக்கு கடனை கொடுத்து விடுவார். சாமி கும்பிடும் போது வாழ்க்கையில் எனக்கு கஷ்டம் கஷ்டம் என்று சொன்னால் கஷ்டம் தான் உங்களை பின்தொடரும். பணம் பணம் என்று சொல்லிப் பாருங்கள். பணம் உங்களை பின் தொடர தொடங்கிவிடும். இதுதான் வழிபாட்டிற்கு பின்னால் இருக்கக்கூடிய சூட்சமமே. இதை புரிந்து கொண்டு வழிபாடு செய்தாலே நாம் வாழ்க்கையில் மகாலட்சுமி அருள் ஆசையை நிறைவாக பெற முடியும்.
மேலே சொன்ன தமிழ் வார்த்தைகளுக்கு பதிலாக ஆங்கிலத்தில் கூட இந்த வார்த்தையை சொல்லலாம். கடவுளுக்கு மொழியெல்லாம் பிரச்சனை கிடையாது நம்முடைய எண்ண அதிர்வலைகள் தான் முக்கியம். ‘money money money’ என்று சொல்லலாம் ‘unlimited money follows in my life’. இந்த வார்த்தைகளை கூட நீங்கள் பயன்படுத்தலாம். தினமும் காலையில் எழுந்து இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பவர்களுடைய வாழ்க்கையில் பணம் அது பாத்துக்கு வந்து கொண்டே இருக்கும். அது பாட்டுக்கு செலவாகிக் கொண்டே இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள்.
கைக்கு செலவுக்கு இப்போது பணம் இருக்கிறதா, சந்தோஷம். ஒரு சில செலவுகளை குறைத்துக் கொண்டு அந்த பணத்தை நாளை சேமிப்புக்கு எடுத்து வைக்கின்றோமா சந்தோஷம். இந்த நாளுக்கு கடவுளுக்கு இறைவனுக்கு நன்றி இவ்வளவுதான். வாழ்க்கை சுலபமாக வாழ்ந்து விடலாம். நிறைய பேர் சிந்திக்கலாம் எங்களுக்கு ஒரு நாள் வாழ்வதே ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. 100 ரூபாய் வருமானம் இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுகின்றோம் என்று.
இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க இளநீர் பரிகாரம்
இதற்கெல்லாம் காரணம் தலைவிதி. கிரக சூழ்நிலை என்று இருந்தாலும், நீங்கள் விடாது உழைக்க வேண்டும் ‘தெய்வத்தால் ஆகாது எனில் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்று சொல்கிறார்கள். தெய்வத்தால் உங்களுக்கு எதுவுமே கொடுக்க முடியாது என்றாலும், நீங்கள் உழைத்தீர்கள் அல்லவா ஒரு உழைப்பு, அதற்கான கூலியை கட்டாயம் இந்த பிரபஞ்சம் உங்கள் கையில் கொண்டு வந்து கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் பெறவும்