- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி முதல் நாள் வழிபடும் முறை

புரட்டாசி முதல் நாள் வழிபடும் முறை

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட புரட்டாசி மாதம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறக்கிறது. அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் கூடுதல் விசேஷம் நிறைந்த நாளாக அந்த நாள் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் எந்த முறையில் நாம் பெருமாளை வழிபட்டால் பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் மங்களங்கள் பெருகும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

புரட்டாசி முதல் நாள் வழிபடும் முறை

புரட்டாசி மாதம் என்றதுமே நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் பெருமாள் தான். பெருமாளுக்கு மட்டும் உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்வது கிடையாது. அம்பிகையின் வழிபாட்டிற்கும் உகந்த மாதமாக திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் புரட்டாசி மாதம் தான் முப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி திருவிழா நடைபெறும் என்பதுதான். அதேபோல் சிவபெருமானுக்கு உரிய கேதார கௌரி விரதம் புரட்டாசி மாதத்தில் தான் வரும். இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த புரட்டாசி மாதத்தின் முதல் நாள் எந்த முறையில் வழிபாடு செய்தால் அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

புரட்டாசி மாதம் முதல் நாள் பௌர்ணமியோடு சேர்ந்து வருவதால் அன்றைய தினம் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதேபோல் அன்றைய தினம் காலையில் அருகில் இருக்கக்கூடிய மளிகை கடைக்கு சென்று மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு வாங்கி வந்து அதை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அதை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் பெருமாளின் அருள் நமக்கு கிடைக்கும்.

இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் வீட்டில் இருக்கக்கூடிய சுவாமி சிலைகள் அனைவருக்கும் மஞ்சள் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி அபிஷேகம் செய்து முடித்த பிறகு பெருமாளுக்கு துளசி மாலையை வைக்க வேண்டும். மற்ற தெய்வங்களுக்கு வாசனை மிகுந்த மலர்களை வைக்க வேண்டும். இப்படி வைத்து விட்டு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு “ஓம் கோவிந்தாய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மந்திரத்தை புரட்டாசி முதல் நாள் மட்டும் தான் உச்சரிக்க வேண்டும் என்று இல்லை. புரட்டாசி மாதம் முழுவதும் இந்த மந்திரத்தை நாம் உச்சரித்தோம் என்றால் பெருமாளின் அருளால் நமக்கு நன்மைகள் உண்டாகும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். எந்த வீட்டில் கோவிந்தா நாமம் ஒலிக்கிறதோ அந்த வீட்டில் பெருமாள் மற்றும் மகாலட்சுமி வருவார்கள் என்றும் அந்த வீட்டிற்கு அவர்களின் பரிபூரணமான அருள் கிடைக்கும் என்றும், அதே சமயம் மங்களங்கள் பெருகி செல்வ செழிப்புடன் வாழ்க்கையை வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: மன மகிழ்ச்சியுடன் வாழ வீட்டில் வளர்க்க வேண்டிய செடி

புரட்டாசி முதல் நாள் இந்த முறையில் எளிமையான வழிபாட்டு முறையை செய்வதன் மூலம் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்