- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று சொல்ல வேண்டிய சிவன் விஷ்ணு மந்திரம்

இன்று சொல்ல வேண்டிய சிவன் விஷ்ணு மந்திரம்

- Advertisement -

இன்று சிவபெருமானுக்கு உரிய பிரதோஷமும், பெருமாளுக்கு உரிய திருவோணம் நட்சத்திரம் இருக்கிறது. கேரள மக்களுக்கு இது ஓணம் பண்டிகை.  தமிழ்நாட்டில் இன்று வாமன ஜெயந்தி என்று சொல்லுவார்கள். வாமனனாக பெருமாள் அவதாரம் செய்த நாள் இன்று. இந்த நாளில் சிவபெருமானின் ஆசியும் நமக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.

அந்த பெருமாளின் ஆசீர்வாதமும் நமக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும். அறியும் சிவனும் ஒன்று அறியாதவர்கள் வாயில் மண்ணு என்று சொல்லுவார்கள். இதன் அடிப்படையில் தான் இன்று ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க போகின்றோம். இந்த இரண்டு பேரையும் ஒன்று சேர்க்கும் இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும். உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் விலகும். செய்த பாவங்கள் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நாள் வழிபாடு சேர்த்து நாம் உச்சரிக்க வேண்டிய அந்த மந்திரத்தை பற்றி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சிவன் விஷ்ணு மந்திரம்

முடிந்தவர்கள் இன்று காலை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மாலை பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று, சிவபெருமானையும் வழிபாடு செய்யுங்கள். சில பேருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்காது. வீட்டில் இருந்தபடியே இந்த இரண்டு வழிபாட்டையும் ஒரு சேர செய்யலாம். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையில் குடும்பத்துடன் அமர்ந்து ‘ஹரி ஓம் நமசிவய’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம். 27 முறை சொல்லலாம். வெறும் ஒருமுறை சொன்னால் கூட உங்களுக்கு புண்ணியம் தான்.

எங்களால் பூஜை அறையில் விளக்கும் ஏற்ற முடியாது, வழிபாடும் செய்ய முடியாது இப்போது இந்த பதிவை படித்து முடித்தவுடன் கைபேசியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு உங்களுடைய வேலையை தொடங்குங்கள். அந்த ஹரியின் ஆசிர்வாதம் சிவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

கோடீஸ்வர யோகம் பெற வேண்டும் என்றால் அந்த எம்பெருமானின் ஆசிர்வாதம் நமக்கு கட்டாயம் தேவை. கோடீஸ்வர யோகத்தை ஈர்க்கக்கூடிய சக்தி வெட்டிவேருக்கு உண்டு. வெட்டிவேர் வாசம், நிறைந்த நேர்மறை ஆற்றல் நிறைந்தது. இன்று நாட்டு மருந்து கடைகளில் இருந்து சிறிதளவு வெட்டிவேர் வாங்கி சிவன் கோவிலுக்கு தானமாக கொடுப்பது மிக மிக சிறப்பு.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி முதல் நாள் வழிபடும் முறை

இந்த வாசனை நிறைந்த வெட்டிவேரை முடிந்தால் அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமான் பாதத்தில் வைத்து அதை மீண்டும் கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் ஒரு டம்ளர் தண்ணீரில், இந்த வெட்டிவேரை போட்டு வைத்தால், வீடு முழுவதும் அந்த சிவபெருமானின் அருள் ஆசி பரவி நிற்கும் என்பது நம்பிக்கை. வெட்டிவேரின் வாசத்தில் நீங்கள் சிவபெருமானை உணருவீர்கள். வீட்டில் பணக்கஷ்டம் இருக்கிறது கடன் சுமை இருக்கிறது செல்வ வளத்தில் நீங்கள் சீக்கிரம் உயர வேண்டும் என்றால் இந்த வெட்டிவேர் பரிகாரத்தையும் செய்து பலன் பெறலாம்.

சற்று முன்