- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசேமிப்பை உயர்த்தும் மண் உண்டியல் பரிகாரம்

சேமிப்பை உயர்த்தும் மண் உண்டியல் பரிகாரம்

- Advertisement -

இன்று விடுமுறை நாள். ஞாயிற்றுக்கிழமை, பிரதோஷம் இருக்கிறது. திருவோண நட்சத்திரம் இருக்கிறது. இந்த நல்ல நாளில் உண்டியல் வாங்குவதற்கு உண்டான நேரமும் உங்களுக்கு இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் கடைக்கு போய் மண் உண்டியல் ஒன்று பேரம் பேசாமல் வாங்கி வரவும். இந்த உண்டியலை வாங்கி உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து விடுங்கள்.

இன்று இந்த உண்டியலுக்கு எந்த வேலையும் கிடையாது. பௌர்ணமி தினத்தன்று தான் இந்த உண்டியலில் நாம் பணத்தை சேர்க்க போகின்றோம். எந்த திசையில் இந்த உண்டியலை வைத்து எப்படி இதில் பணத்தை சேமிக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பணம் சேர்க்க உண்டியல் பரிகாரம்

பௌர்ணமி மாலை நேரத்தில், 6:00 மணி அளவில் நிலவு உதயமாகும் என்றால் அந்த சமயத்தில் உங்களுடைய கையில் 6, ஒரு ரூபாயை நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நிலவின் வெளிச்சம் உங்கள் மீதும், உங்கள் கையில் இருக்கும் அந்த நாணயத்தின் மீதும் விழுவது ரொம்ப ரொம்ப நல்லது. வெட்ட வெளியான இடத்தில் நின்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிலவு ஒளியை பார்த்து எனக்கு சேமிப்பு பல மடங்கு உயர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

கொஞ்ச நேரம் அந்த நிலா ஒளியில் 6, ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தாலும் தவறு கிடையாது. பிறகு வீட்டிற்குள் வந்து அந்த உண்டியலை எடுத்து ‘தென்மேற்கு மூலையில்’ வைத்து விட வேண்டும். முதலில் அந்த உண்டியலில் 6 வெந்தயம், போட்டுவிட்டு, பிறகு இந்த 6, ஒரு ரூபாய் நாணயத்தையும் அந்த உண்டியலில் சேர்த்து விடுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை 17-09-2024 ஆம் தேதி முழு பௌர்ணமி திதியானது வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நாளை யாரும் தவற விடாதிங்க. மண் உண்டியலை மட்டும் தான் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பௌர்ணமி நாளிலிருந்து நீங்கள் இந்த உண்டியலில் பணம் சேர்க்கத் தொடங்கினால் மேலும் மேலும் அந்த உண்டியலில் சீக்கிரம் பணம் சேர தொடங்கும். அது மட்டுமல்லாமல் உங்களுடைய மற்ற சேமிப்புகளும் இரட்டிப்பாக உயரம் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: இன்று சொல்ல வேண்டிய சிவன் விஷ்ணு மந்திரம்

பௌர்ணமி தினத்தில் அம்பாளையும் உங்கள் குலதெய்வத்தையும் வேண்டி இந்த விஷயத்தை செய்துதான் பாருங்களேன். இதை நீங்களே தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த உண்டியலில் பணம் சேர்க்கும் விஷயத்தை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். அவர்களது கையால் பணத்தை சேமித்தீர்கள் என்றால் இன்னும் உங்களுக்கு நல்லது தான் நடக்கும். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்