நாளைய தினம் மஹாளய அமாவாசை. புரட்டாசி மாதத்தில் வந்திருக்கும் இந்த அமாவாசை திதியில் முன்னோர்கள் வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்த பலன்களைத் தரும். முன்னோர்களின் சாபத்தை நீக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தையும் நமக்கு பெற்றுத் தரும். இந்த நாள் பிரபஞ்சம் முழுவதும் நல்ல ஆற்றல் நிரம்பி இருக்கும்.
இந்த நாள் முன்னோர்கள் வழிபாட்டிற்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல சில தாந்த்ரீக பரிகாரங்கள் செய்வதற்கும் இந்த நாளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நிறைய பேர் வீடுகளில், இன்று பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கக்கூடிய கஷ்டம் பண கஷ்டம். வறுமை என்பது ஒவ்வொரு வீட்டிலும் தலை விரித்து ஆடுகிறது. செலவு கட்டுக்கடங்காமல் செல்கிறது.
இதையெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாளைய தினம் செய்ய வேண்டிய எளிமையான ஒரு தாந்திரீக வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாளை காலை சூரிய உதயத்திற்கு பிறகு, மதியம் 11:45 மணிக்குள் முன்னோர்களுடைய ஆன்மீகம் வழிபாட்டை எல்லாம் முடித்துக் கொள்ளுங்கள். காரணம் புதன்கிழமை மதியம் 12:00-1:30 ராகு கால நேரம் இருக்கிறது.
அதனால் தான் முன்னோர்கள் வழிபாட்டை மதியம் 12 மணிக்கு முன்பாக படையல் போட்டு நிறைவாக செய்து முடித்து விடுங்கள். முன்னோர்களின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்கள் ஆசியைப் பெற்ற இந்த நாளில், இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்வது அற்புதம் வாய்ந்த பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமாவாசை பரிகாரம் 2024
நாளை உங்களுக்கு கிடைக்க வேண்டிய பேர் குப்பைமேனி வேர். இது ரோட்டோரங்களில் நிறைய இடத்தில் இருக்கும். கொஞ்சம் சுத்தபத்தமாக இருக்கக்கூடிய இடமாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த செடிக்கு மேலே கொஞ்சமாக மஞ்சள் தண்ணீர் தெளித்து, இது என்னுடைய தேவைக்காக, நன்மைக்காக மட்டுமே பறிக்கப்படுகிறது என்று வணங்கி, செடியை பறிப்பதற்கு முன்பு செடியிடம் ஒரு மன்னிப்பை கேட்டுக் கொண்டு, செடியிடம் அனுமதியும் கேட்டுக் கொண்டு அந்த செடியை வேரோடு பிடுங்கிக் கொள்ளுங்கள்.
இன்று மாலை 6:00 மணிக்குள் இந்த வேர் கிடைத்தால் பரிகாரத்திற்கு கொண்டு வந்து வீட்டில் வைக்கலாம். நாளை பரிகாரத்தை செய்து கொள்ளலாம். நாளைய தினமே தேவை என்பவர்கள், நாளை மாலை 5 மணிக்கு முன்பாக இந்த வேரை எடுத்துக் கொள்ளுங்கள். செடியின் அடிப்பகுதியில் இருக்கும் வேர் மட்டும்தான் நமக்குத் தேவை. அதை எடுத்து மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு கொஞ்ச நேரம் காய வைத்து விடுங்கள்.
நாளை 2-10-2014 புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடவும். ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து வைத்திருக்கும் இந்த குப்பைமேனி வேர், ஒரே ஒரு வசம்பு, வைத்து உங்கள் பணகஷ்டம் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார குலதெய்வத்தையும் முன்னோர்களையும் மகாலட்சுமியையும் வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த கிண்ணத்தை உங்களுடைய கையில் எடுத்து வைத்துக் கொண்டு பிரார்த்தனையை செய்யலாம். உங்களுடைய பிரார்த்தனையை இந்த வேர் மற்றும் வசம்பு தன் வசப்படுத்திக் கொள்ளும். இறுதியாக தீப தூப ஆராதனைகள் காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்
ஒரு மணி நேரம் இந்த இரண்டு பொருட்களும் பூஜை அறையிலேயே இருக்கட்டும். பிறகு இந்த கிண்ணத்தை அப்படியே எடுத்து உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விடவும். நீங்கள் எந்த இடத்தில் பணம் நகையை எல்லாம் வைத்து புழங்குகிறார்களோ அந்த இடத்தில் இந்த கிண்ணத்தை வைத்தால், உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை அந்த நிமிடத்தோடு விலகத் தொடங்கி விடும். கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு வருமானம் பெருக தொடங்கும். அந்த வருமானம் சேமிப்பிலும் தங்கும்.
இதையும் படிக்கலாமே: குலதெய்வ அருள் கிடைக்க மஹாளய அமாவாசை பரிகாரம்
கடன் சுமை படிப்படியாக குறையும். தேவைக்கு அதிகமாக கடவுளிடம் கேட்காதீங்க. உங்களுடைய தேவைக்கு ஏற்ப உங்களுக்கு தகுதிக்கு ஏற்ப என்ன தேவையோ கடவுளிடம் நாளைய தினம் பிரார்த்தனை வைத்தால், அது நிச்சயம் பலிக்கும். அதற்கு உதவியாக இருக்கக்கூடிய பொருட்கள் தான் இந்த குப்பைமேனி வேரும், வசம்பும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த தாந்திரீக பரிகாரத்தை நாளைய தினம் செய்து பலன் பெறலாம்.