நவகிரகங்களில் ஒரு சில கிரகங்கள் தான் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றன. அந்த வகையில் குரு பகவானுக்கு இருக்கக் கூடிய சக்தி மிகவும் அளப்பரியது. குரு பார்க்க கோடி நன்மை என்கிற ஒரு ஜோதிட பழமொழி உண்டு. குருவின் பார்வை பட்டாலே கிடைக்காத அதிர்ஷ்டங்கள் எல்லாம் நம்மை தேடி வரும். அத்தகைய குரு பகவானுக்கு வியாழன் கிழமையில் இந்த மாலை சாற்றுவதால் ஏற்படக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
குரு பகவானுக்கு உகந்த கிழமை வியாழன் கிழமை ஆகும். வியாழன் கிழமை குருவை தரிசிப்பவருக்கு, விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு எல்லா வளங்களும் தேடி தானாகவே வந்து சேரும் என்பது ஐதீகம். குரு அமர்ந்திருக்கும் இடத்திற்கு சங்கடங்கள் கொடுத்தாலும், அவருடைய பார்வை படும் இடங்களுக்கு கேட்காமலேயே அள்ளி அள்ளி கொடுக்கக் கூடியவர்.
குரு பகவானுக்கு உகந்த வியாழன் கிழைமையில் விரதம் இருப்பது நல்லது. அன்று மாமிசம் எதுவும் சாப்பிடாமல் சைவ உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மதிய
ஒருவேளை உபவாசம் இருப்பது இன்னும் சிறப்பு. குரு பகவானுக்கு உரிய மந்திரங்கள், குரு ஸ்தோத்திரங்கள், குரு ஸ்லோகங்கள் பாட குடும்பத்தில் குறைவில்லாத சந்தோசம் வரும்.
குரு ஓரை ‘சுப ஓரை’ ஆகும். குரு சுப ஹோரையில் குரு பகவானுக்கு வழிபாடு செய்ய வேண்டும். வியாழன் கிழமையில் காலை 6:00 மணியிலிருந்து 7.00 மணி வரையிலும், 8.00 மணியிலிருந்து 9:00 மணி வரையிலும் குரு ஓரை இருக்கும். அதே போல மதியம் 1.00 மணியிலிருந்து 2:00 மணி வரையிலும், 3.00 மணியிலிருந்து 4.00 மணி வரையிலும் குரு ஓரை நிலவும்.
இந்த சமயத்தில் குரு சன்னதிக்கு சென்று கொண்டை கடலையில் மாலை கோர்த்து அணிவிக்க வேண்டும். மஞ்சள் நிறம் என்பது குருவுக்கு உகந்த நிறம் ஆகும் எனவே மஞ்சள் நிற கொண்டைக்கடலையை முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் அவித்து எடுத்து அதை ஊசி நூலில் ஒவ்வொன்றாக கோர்த்து மாலை போல செய்து கொள்ள வேண்டும். பின்னர் குருவுக்கு உகந்த மஞ்சள் நிற பூக்களை அர்ச்சனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
மஹாளய அமாவாசை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்
மஞ்சள் நிற பூவை கொடுத்து அர்ச்சித்து, கொண்டைக்கடலை மாலையை சாற்றி மனதார குரு பகவானை வழிபட வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு வியாழன் கிழமை தோறும் இவ்வழிபாட்டை மேற்கொண்டு வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய வறுமை நிலை மாறும், கஷ்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அது தீர்ந்து அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். குரு பகவானுக்கு வழிபாடுகள் செய்த பின்பு, அங்கு வரும் பக்தர்களுக்கு கொண்டைக் கடலையை தானம் அளிக்க வேண்டும். அன்றைய நாள் நீங்களும் மஞ்சள் நிற வஸ்திரம் அணிவது நல்ல பலன்களை கொடுக்கும். மேலும் குரு கவசம் படிப்பது, எளியோர்களுக்கு இயன்ற அன்னதானம் செய்வது, குரு ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு உதவிகள் புரிவது, புதிய கல்வி துவங்குவது, புதிய கலைகளை கற்பது போன்ற விஷயங்களை செய்யலாம். இதனால் குருவின் திருவருள் கிட்டும்.