- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமஹாளய அமாவாசை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

மஹாளய அமாவாசை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

மகாளய பட்சமானது நிறையவடைய கூடிய நாளைத்தான், மகாளய அமாவாசையாக வழிபடுகின்றோம். பூலோகத்திற்கு வந்த முன்னோர்கள் எல்லாம், இன்று திரும்பவும் பித்ருலோகம் செல்லக்கூடிய நாள். நாம் அவர்களுக்கு இந்த பூலோகத்தில் தர்ப்பணம் செய்து கொடுத்த எள்லையும் தண்ணீரையும், ஒரு வருட உணவாக ஏற்றுக் கொண்டு, மனநிறைவோடு பித்துரு லோகம் செல்ல வேண்டும்.

எல்லோரும் இன்று அவரவர் வீட்டு மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பண காரியங்களை முறையாக செய்திருப்பீர்கள். கூடவே, இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து விடுங்கள். இன்று இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய முன்னோர்களின் திருவுருவப்படம் இருக்கும் அல்லவா, அதன் முன்பு இரண்டு நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மறைந்த முன்னோர்களை எல்லாம் நினைத்து அவர்களின் ஆசிகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு, பிறகு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதற்கு கட்டாயம் ஒரு எலுமிச்சம் பழம் தேவை. ஒரு சின்ன கின்னத்தில் விபூதி பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். விபூதிக்கு மேலே எலுமிச்சம் பழத்தை நிற்க வைத்து, எலுமிச்சம் பழத்தின் மேலே ஒரு சின்ன கற்பூரம் வைத்து, அதை ஏற்றி விட வேண்டும். எலுமிச்சம் பழத்திற்கு மேலே கற்பூரம் எரிய வேண்டும்.

மறைந்த முன்னோர்களுக்கு செய்த வழிபாட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மன்னிக்கவும். அறிந்தும் அறியாமலும் நாங்கள் செய்த தவறுகளுக்கு மன்னிக்கவும். எங்களுடைய குடும்பமும் குழந்தைகளும், அடுத்தடுத்து வரக்கூடிய சந்ததிகளுக்கும் நீங்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பித்ரு தோஷத்தாலோ, பித்ரு சாபத்தாலோ வீட்டில் சுப காரிய தடைகள் வரக்கூடாது.

- Advertisement -

வீட்டில் பண கஷ்டமோ, மனக்கஷ்டமோ பொருள் இழப்பீடு உயிரிழப்பீடோ ஏற்படாமல் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனமுருக பிரார்த்தனை வையுங்கள். எலுமிச்சம் பழத்தின் மேல் ஏற்றப்பட்ட கற்பூரம் எரிந்து கொண்டே இருக்கும். நீங்கள் வீட்டில் பிராத்தனை செய்யலாம். இந்த பரிகாரத்தை யார் செய்வது? மறைந்த முன்னோர்களின் மகன் இருந்தால் செய்யலாம்.

மறைந்த முன்னோர்களின் மகள் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்வது நல்லது. பிறகு கற்பூரம் பூர்த்தி அடைந்த பிறகு அந்த எலுமிச்சம் பழமும், அந்த விபூதியும் அப்படியே அந்த முன்னோரின் படத்திற்கு முன்பு, இரவு முழுவதும் இருக்கட்டும். மறுநாள் காலை அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு போய் கால் படாத இடத்தில் ஊருக்கு புறமாக போட்டு விடுங்கள்.

- Advertisement -

விபூதியை நீங்கள் தினந்தோறும் நெற்றியில் வைத்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த விபூதி உங்களது முன்னோர்களின் ஆசி பெற்ற விபூதி ஆகும். இன்று மகாளய அமாவாசையில் உங்களுடைய முன்னோர்கள் வழிபாட்டை மேலும் சிறப்பாக்க, முன்னோர்களின் ஆசிர்வாதத்தை மேலும் சிறப்பாக பெறுவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். இன்று இரவு 9 மணிக்கு மேல் வீட்டில் உங்களுடைய குழந்தைகள் மற்றவர்கள் எல்லாம் தூங்கிய பிறகு கூட நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டு பிறகு தூங்க செல்லவும்.

இதையும் படிக்கலாமே: சனி அமாவாசையில் விளக்கு ஏற்றும் பலன்கள்

உங்களுடைய வீட்டில் தீர்க்க முடியாத ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும் அல்லவா. அந்த  பிரச்சனையானது அடுத்து ஒரு சில நாட்களில் தீரும். குடும்பத்தில் இதுவரை நடக்காத சுப காரியங்கள் எல்லாம் இனி வரக்கூடிய காலகட்டத்தில் நடக்கும். இந்த பரிகாரத்தை செய்த பிறகு உங்களுடைய குடும்பத்தில் நீங்கள் நிறைய நல்ல மாற்றங்களை காண முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்