வேகவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள். நாளைக்கு வரப்போகும் பிரச்சனையை பார்த்து இன்றே பயந்து பதட்டப்பட்டு நடுங்கி இருக்கின்றோம். இன்றைய சூழ்நிலையில், இந்த கலியுகத்தில் நம்மை துரத்தும் பயத்திலிருந்தும் பதட்டத்தில் இருந்தும் நாம் தப்பிக்க வேண்டும் என்றால், செய்ய வேண்டிய வழிபாடு முருகன் வழிபாடு.
முருகர் இருக்கின்றார் என்பதற்கு சாட்சி பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளுக்கு முருகப்பெருமான் நேரில் வந்தே காட்சி தந்துள்ளார். அந்த முருகப்பெருமானின் அருளால் பாம்பன் சுவாமிகள் நமக்கு நிறைய பந்தங்களை கொடுத்துள்ளார். அதில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பந்தம் தான் கமலபந்தம் இது நமக்கு மனதிற்கு நிம்மதியை கொடுக்கக்கூடிய பந்தம். இந்தப் பாடலை நம்முடைய வீட்டில் எந்த நேரத்தில் எப்படி உச்சரிப்பது, நமக்கு இருக்கும் மன பதட்டத்தில் இருந்து வெளிவருவதற்கு எளிமையான ஆன்மீக தகவல் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.
இந்தப் பாடலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் உச்சரிக்கலாம். பூஜை சாமான்கள் விற்கும் கடையில், கமல பந்தம் என்று கேட்டால் கொடுப்பார்கள். ஸ்டிக்கராக கிடைக்கும். குறிப்பாக பிரசித்தி பெற்ற முருகன் கோவில் வெளியில் இருக்கும் கடைகளில் இந்த சக்கரம் விற்கும். அப்படி இல்லையா கைபேசியில் கூகுளில், கமல பந்தம் என்று போட்டாலே இந்த வரைபடம் உங்களுக்கு வந்துவிடும்.
அதை பிரிண்ட் எடுத்து உங்கள் கண் முன்னே ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். மறைவாக ஒட்டக்கூடாது. உங்கள் கண்ணுக்கு அது அடிக்கடி தெரிய வேண்டும். நீங்கள் பெண்களாக இருந்தால் அதை உங்கள் வீட்டு பிரிட்ஜ் கதவின் மேல் ஒட்டி வையுங்கள், அல்லது உங்கள் வீட்டு பீரோவின் மேல் ஒட்டி வையுங்கள். அடிக்கடி அது உங்கள் கண்களில் பட்டுக் கொண்டே இருக்கும் வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு இருக்கும் கெட்ட கர்மா இதை படிக்க விடாமல் தடுக்கும்.
ஒரு நாளைக்கு 6 முறை இந்த கமல பந்தத்தை நீங்கள் படித்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். நிறைய பேர் அவர்களுக்கு இருக்கும் மன பயம் மன பதட்டத்தால், இரவில் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டுதான் தூங்குவார்கள். தொடர்ந்து 6 நாள், 6 முறை தூங்க செல்வதற்கு முன்பு இந்த கமல பந்தத்தை படித்து பாருங்கள். தூக்க மாத்திரையை எல்லாம் தூக்கி போட்டு விடலாம் நிம்மதியான தூக்கம் கிடைக்கும் மன அமைதியை பெறுவீர்கள் அப்படிப்பட்ட கமல பந்தம் வரிகள் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.
கமல பந்தம்
வரவிதி திருவ வருதி பொனரவ
வரனது கருவ வருகணை குரவ
வரகுக மருவ வருமறை பரவ
வரபத மருவ வருமதி விரவ.
இதை வாசிப்பதற்கு சில பேருக்கு சிரமம் இருக்கலாம். இரண்டு அல்லது மூன்று முறை youtube இல் இந்த பாடலை ஒலிக்க விட்டு, நீங்களும் கூடவே இந்த பாடலை படியுங்கள். இரண்டொரு நாட்களில் உங்களுக்கு இந்த பாடம் மனப்பாடம் ஆகி விடும். பிறகு இந்த கமலசக்கரத்தை பார்த்து இந்த பாடலை முருகனை நினைத்து உச்சரித்து வந்தாலே போதும்.
இதையும் படிக்கலாமே: குரு பகவான் கொண்டைக்கடலை மாலை பலன்கள்
நேரம் கிடைக்கும் போது இந்த பாடலை படியுங்கள் காலை மாலை மதியம் எந்த பொழுதில் படித்தாலும் தவறு கிடையாது முடிந்தால் முருகனுக்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பாடலை படிக்கவும். உங்கள் மனது கோவிலாக இருக்கும். அந்த மனதில் முருகன் மட்டுமே குடி கொண்டிருப்பான் நம்பிக்கை உள்ளவர்கள். ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை செய்து பலன் பெறவும்.