- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசக்தி வாய்ந்த நவராத்திரி மந்திரம்

சக்தி வாய்ந்த நவராத்திரி மந்திரம்

- Advertisement -

புரட்டாசி மாதம் எந்த அளவிற்கு பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறதோ அதே போல் தான் புரட்டாசி மாதம் என்பது அம்பிகையின் வழிபாட்டிற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இதற்கு காரணம் புரட்டாசி மாதத்தில் தான் நவராத்திரி திருவிழா நடைபெறும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரையும் வழிபடக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் இந்த நவராத்திரி நாட்கள் திகழ்கின்றன. இந்த நாட்களில் நாம் சொல்ல வேண்டிய எளிமையான மூன்றெழுத்து மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சக்தி வாய்ந்த நவராத்திரி மந்திரம்

நவராத்திரி சமயத்தில் பலரும் தங்களுடைய இல்லத்தில் படி அமைத்து அதில் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ கொலு வைக்காமல் கலசம் வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ கொலு கலசம் வைக்காமல் அணையா தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ இதை மூன்றையுமே செய்யாமல் ஒன்பது நாட்களும் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது எதுவுமே செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் அதேசமயம் முப்பெரும் தேவியரின் அருளையும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரத்தை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

நவராத்திரி சமயத்தில் நாம் அம்பிகையை வழிபாடு செய்யும்பொழுது துர்க்கை அம்மனின் அருளால் மன தைரியமும் வீரமும் நமக்கு உண்டாகும். மகாலட்சுமியை வழிபாடு செய்வதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும். மேலும் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்குவோம் நல்ல ஞானத்தை பெறுவோம் என்று கூறப்படுகிறது. இப்படி நாம் நவராத்திரி சமயத்தில் கொலுவைத்து கலசம் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் இவ்வளவு நன்மைகளை பெற முடியும். கொலு வைக்க முடியாது, வழிபாடு செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த பலன்கள் அனைத்தையும் பெறவேண்டும் என்றால் அதற்காக கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த மந்திரத்தை காலையில் எழுந்ததும் நம்முடைய உள்ளங்கையை பார்த்து மூன்று முறை கூறலாம் அல்லது அந்த அன்றைய நாள் நிறைவு அடைவதற்குள் அதாவது இரவு 12 மணிக்குள் இந்த மந்திரத்தை கூறலாம். எந்த நேரத்தில் கூறுகிறோம் என்பதை விட எந்த அளவிற்கு மனதார கூறுகிறோம் என்பதுதான் முக்கியம். இதில் துர்க்கை அம்மனுக்குரிய மந்திரமும் இருக்கிறது, மகாலட்சுமி கூறிய மந்திரமும் இருக்கிறது, சரஸ்வதி தேவிக்குரிய மந்திரமும் இருக்கிறது. இந்த மூன்று மந்திரத்தையும் நாம் தினமும் குறைந்தது மூன்று முறையாவது கூறினோம் என்றால் கொலு வைத்து கலசம் வைத்து சிறப்பாக அனைத்து விதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களுக்கு எந்த அளவிற்கு பலன் கிடைக்குமோ அந்த பலன் அனைத்தையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சாதாரணமான மந்திரத்திற்கு இருக்கும் பலனை விட அதிகளவு பீஜே மந்திரத்திற்கு இருக்கிறது என்று பலரும் கூற கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் துர்க்கை அம்மனுக்குரிய பீஜே மந்திரமாக “க்ரீம்” என்னும் மந்திரம் திகழ்கிறது. மகாலட்சுமி தயாரிக்குரிய பீஜே மந்திரமாக “ஸ்ரீம்” என்னும் மந்திரம் திகழ்கிறது. சரஸ்வதி தேவிக்குரிய பீஜே மந்திரமாக “ஐம்” என்னும் மந்திரம் திகழ்கிறது. இந்த மூன்று மந்திரங்களை நாம் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்று முப்பெரும் தேவியரையும் நினைத்து குறைந்தபட்சம் மூன்று முறை கூறும் பொழுது இவர்கள் மூவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க மூன்றாம் பிறை பரிகாரம்
இந்த எளிமையான மூன்றெழுத்து மந்திரத்தை நவராத்திரி நாட்களில் தொடர்ச்சியாக தினமும் கூறுபவர்களுக்கு முப்பெரும் தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் பெறலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்