- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்கத்தை தக்க வைத்துக் கொள்ள நவராத்திரி வழிபாடு

தங்கத்தை தக்க வைத்துக் கொள்ள நவராத்திரி வழிபாடு

- Advertisement -

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கு வழிபாடு செய்யப்படும். இரண்டாவது வரக்கூடிய மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கு வழிபாடு செய்ய வேண்டும். வியாழன் வெள்ளி சனி முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனை வழிபாடு செய்திருப்போம். ஞாயிறு, திங்கள், செவ்வாய் இந்த மூன்று நாட்களும் லட்சுமி தேவிக்கு உண்டான வழிபாட்டு நாட்களாக சொல்லப்பட்டுள்ளது.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு சொந்தமானது இது நாம் எல்லோரும் அறிந்ததே. இன்று ஞாயிற்றுக்கிழமை 6-10-2024 முடிந்தவர்கள் இன்றைய நாளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம், முடியாதவர்கள் நாளை திங்கட்கிழமை இந்த வழிபாட்டை செய்யலாம். அதுவும் முடியாது என்பவர்கள் அதற்கு அடுத்த நாள் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை இந்த வழிபாட்டை செய்யலாம்.

- Advertisement -

லக்ஷ்மி தேவிக்கு உரிய இந்த மூன்று நாட்களில் தங்கம் உங்களிடம் நிலையாக தங்க வேண்டும் என்று, இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் புதுசாக தங்கம் வாங்கக்கூடிய யோகமும் கிடைக்கும். அடமானத்தில் வைத்திருக்கக் கூடிய தங்கத்தை திரும்பவும் மீட்டெடுக்க கூடிய யோகம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் தங்கம் அடமானத்திற்கு செல்லாத யோகமும் வரும்.

தங்கம் சேர நவராத்திரி பரிகாரம்

இந்த வழிபாட்டிற்கு உங்களுக்கு தேவை ஒரே ஒரு தாமரை பூ. பூஜை அறையில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேலே தாமரை பூவை மிதக்கவிட்டு, அந்த தாமரை பூவுக்கும் மேலே உங்களிடம் இருக்கும் ஒரு குண்டுமணி தங்கத்தை வைத்து அந்த பூவுக்கு மேலே உங்கள் வலது கையை வைத்து ‘எங்கள் வீட்டில் இருக்கும் தங்கம் நிலையாக தங்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டால் உங்கள் வீட்டில் இருக்கும் தங்கம் அடமானத்திற்கு செல்லாது. தொலைந்து போகாது திருடு போகாது தலைமுறை தலைமுறைக்கு உங்கள் வீட்டிலேயே தங்கும்.

- Advertisement -

அதுவே உங்கள் வீட்டில் 30 சவரம் இருந்தது, 40 சவரம் இருந்தது, ஆனால் வீட்டுப் பெண்கள் இன்று கவரிங் நகையை அணிந்து கொண்டிருக்கக் கூடிய நிலைமை. எல்லா தங்கமும் அடமானக் கடையில் இருக்கிறது எனும் பட்சத்தில், அதையெல்லாம் திரும்பவும் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இதேபோல வழிபாட்டை செய்து, உங்கள் கையை தாமரை பூவின் மேலே வைத்து சீக்கிரம் தங்கத்தை எல்லாம் அடமானத்திலிருந்து மீட்டு எடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். புது தங்கம் வாங்க வேண்டும் என்றால் புதுசாக நகைகள் சேர வேண்டும் என்று வேண்டுதல் வைக்கலாம்.

இது போல தாமரை பூ மேலே ஒரு சிறு குண்டுமணி தங்கத்தை வைத்து லட்சுமிக்கு சொந்தமான இந்த நவராத்திரி நாட்களில் சுவர்ண தேவதையை நினைத்து மேல் சொன்னபடி வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் உங்கள் வீட்டில் தங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த மூன்று நாட்களும் மகாலட்சுமி தேவி முன்பு தாமரை தண்ணீரில் இருக்கலாம். அந்த தாமரைக்கு மேலே தங்கம் இருந்தால் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கும். சரிங்க, எங்க வீட்டில் குண்டுமணி தங்கம் கூட இல்லை நாங்கள் என்ன செய்வது. வெறும் தாமரையை வைத்து அடுத்த வருடம் இந்த தாமரைக்கு மேலே தங்க ஆபரணத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், சீக்கிரம் புது தங்கம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: எதிர்பாராத நன்மைகள் ஏற்பட மூன்றாம் பிறை தரிசனம்

நம்பிக்கை உள்ளவர்கள் லட்சுமிக்கு சொந்தமான நவராத்திரி தினத்தில் இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலனை பெறலாம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்