- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவராத்திரியில் சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்

நவராத்திரியில் சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்

- Advertisement -

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கு சொந்தமானது. அடுத்து வரும் மூன்று நாட்கள் மகாலட்சுமி தேவிக்கு சொந்தமானது. இறுதியாக வரும் மூன்று நாட்கள் சரஸ்வதி டேவிக்கு சொந்தமானது. 6.10.2024 ஞாயிற்றுக்கிழமை துவங்கக்கூடிய நவராத்திரி நாள் மகாலட்சுமிக்கு சொந்தமான நாள். ஆக ஞாயிறு திங்கள் செவ்வாய், இந்த மூன்று நாட்களும் லட்சுமி ஸ்ரீதேவிக்கு சொந்தம்.

இந்த மூன்று நாட்களும் உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி தேவிக்கு முன்பாக விளக்கு ஏற்றி பின் சொல்லக் கூடிய மந்திரத்தை சொல்லி வழிபாட்டை மேற்கொண்டால், உங்கள் குடும்பத்திற்கு எந்த ஜென்மத்திலும் பணக்கஷ்டமே வராது. மகாலட்சுமி தாய் உங்களுக்கான வரங்களை வாரி கொடுக்கக் கூடிய அந்த வழிபாட்டை எப்படி மேற்கொள்வது. நாம் இந்த மூன்று நாட்களில் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நவராத்திரியில் லட்சுமி வழிபாடு

மகாலட்சுமி வழிபாடு என்றால் அதில் முதலில் இருப்பது தாமரைப்பூ. சிரமம் பார்க்காமல் காசு பணம் பார்க்காமல் தினமும் மகாலட்சுமிக்கு இந்த தாமரை பூவை வையுங்கள். அதாவது நவராத்திரியில் வரக்கூடிய லட்சுமிக்கு சொந்தமான மூன்று நாட்களிலும் மகாலட்சுமிக்கு தாமரை பூ வைக்க வேண்டும். ஞாயிறு திங்கள் செவ்வாய் இந்த மூன்று நாட்களும் மகாலட்சுமிக்கு முன்பாக ஒரு தாமரை பூவை வைத்து அதற்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

அந்த தாமரை பூவுகு மேலேயே குங்கும அர்ச்சனை செய்யலாம். 108 முறை குங்கும அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை எல்லாம் சேகரித்து ஒரு டப்பாவில் போட்டுக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கூடுதலான குங்குமம் தான் இருக்கும். இந்த குங்குமத்தினை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் நீங்கள் தானமாக கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. லட்சுமி கடாட்சம் அவர்களுக்கும் கிடைக்கும். உங்களுடைய சொந்த பந்தங்களுக்கு இது, மகாலட்சுமி குங்குமம் என்று சொல்லி நெறியில் இட்டுக் கொள்ள தானமாக கொடுக்கவும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை ஒரு புது தாமரைப்பூ, குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த குங்குமத்தை தனியாக சேகரிக்க வேண்டும். மறுபடியும் திங்கட்கிழமை புது தாமரை பூ வைத்து குங்குமரசனை செய்து அந்த குங்குமத்தையும் தனியாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதே போல செவ்வாய்க்கிழமையும் இந்த வழிபாட்டை செய்து நிறைவு செய்து கொள்ளுங்கள். சரிங்க, மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம் தான் என்ன.

நவராத்திரியில் சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்

ஸ்ரீ ஓம் சக்தி ஓம்

- Advertisement -

இதுதாங்க அந்த மந்திரம். இந்த வார்த்தையை, லட்சுமிக்கு சொந்தமான நவராத்திரி நாட்களில் சொல்லும் போது அபரி விதமான மகாலட்சுமி வசியத்தை பெறுவீர்கள். எவ்வளவு பெரிய கடன் பிரச்சினையாக இருந்தாலும் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டம் உங்களை விட்டு விலகுவதற்கு இந்த எளிமையான மந்திரமும், எளிமையான வழிபாடும் நிச்சயம் வழிவகுக்கும்.

இதையும் படிக்கலாமே: மூன்றாம் பிறையுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறை

வழிபாடு முடிந்தவுடன் தாமரைப்பூ நன்றாக வாடிய பிறகு, கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மேல் சொன்னபடி குங்குமத்தை நீங்களும் வைத்து பயன்படுத்தலாம். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அதை தானமாக கொடுத்து அவர்களையும் பலனடைய செய்யலாம். குங்குமதானம், வீட்டிற்கு ரொம்ப ரொம்ப சிறப்பு. தவற விடாதீங்க. இந்த நவராத்திரி நாளிலேயே இந்த பூஜையை செய்யுங்கள். இந்த நவராத்திரி நாளிலேயே குங்குமத்தையும் தானமாக கொடுத்து மகாலட்சுமி அருள் கடாட்சத்தை பெறவும்.

சற்று முன்