- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் அக்டோபர் மாத மைத்ரேய முகூர்த்தம்

கடன் தீர்க்கும் அக்டோபர் மாத மைத்ரேய முகூர்த்தம்

- Advertisement -

ஒரு நாளில் 30 முகூர்த்தங்கள் வருகிறது என்று கூறப்படுகிறது. அந்த முகூர்த்தங்களை பார்த்து அதற்குரிய செயல்களில் நாம் ஈடுபட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முகூர்த்தங்களில் ஒன்றாக திகழ்வதுதான் மைத்ரேய முகூர்த்தம். இது தினமும் வராது. குறிப்பிட்ட நட்சத்திரமும் லக்னமும் சேர்ந்து வரக்கூடிய நேரத்தை தான் மைத்ரேய முகூர்த்தம் என்று கூறுவோம். அந்த நேரத்தில் நாம் கடன் அடைத்தோம் என்றால் அந்த கடன் விரைவிலேயே அடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மைத்ரேய முகூர்த்தம் அக்டோபர் மாதத்தில் எந்த நாட்களில் வருகிறது? என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அக்டோபர் மாத மைத்ரேய முகூர்த்தம்

இரண்டு நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்து தான் மைத்ரேய முகூர்த்தம் என்பது வரும். அந்த நட்சத்திரங்கள் தான் அஸ்வினி மற்றும் அனுஷம். இந்த இரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் விருச்சக லக்னம் மற்றும் மேஷ லக்னம் வரக்கூடிய நேரத்தை தான் மைத்ரேய முகூர்த்தம் என்று கூறுவோம். இந்த நேரத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்துவிட்டு வாங்கிய கடனிலிருந்து ஒரு சிறிய தொகையாவது செலுத்தினோம் என்றால் அந்த கடன் விரைவிலேயே அடைவதற்குரிய வழியை முருகப்பெருமான் காட்டுவார் என்றும் மேலும் கடன் வாங்காத அளவிற்கு நல்ல முறையில் நம்முடைய வாழ்க்கை சூழலை மாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த மைத்ரேய முகூர்த்தம் அக்டோபர் மாதத்தில் 7ம் தேதியும் 17ஆம் தேதியும் வருகிறது. 7ஆம் தேதி அன்று விருச்சிக லக்னம் வரக்கூடிய நேரம் காலை 8:48 மணி முதல் 10:55 மணி வரை மைத்ரேய முகூர்த்தம் திகழ்கிறது. அதேபோல் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி மேஷ லக்னம் வரக்கூடிய நேரம் ஆன மாலை 6 மணி 9 நிமிடத்திலிருந்து 7 மணி 52 நிமிடம் வரை மைத்ரேய முகூர்த்தம் திகழ்கிறது. இந்த நேரத்தில் முருகப்பெருமானை ஒரு சூட்சமமான முறையில் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் ஆலயத்தில் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டுமே தவிர்த்து பிற கோவிலில் செய்யக்கூடாது. முதலில் செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட சிறிய அளவில் இருக்கக்கூடிய வேலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஆறு கிலோ செவ்வரளி பூ, 600 கிராம் குங்குமம் வாங்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் முன்பாகவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மைத்ரேய முகூர்த்தம் ஆரம்பிக்கும் நேரத்தில் இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு முருகனின் ஆலயத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வேலை முருகனின் உண்டியலில் போட்டுவிட்டு முருகனுக்கு சிவப்பு நிற திரி போட்டு 6 நெய் தீபங்கள் ஏற்றிவிட்டு, இந்த குங்குமத்தையும் செவ்வரளி பூக்களையும் முருகனுக்கு கொடுத்துவிட்டு கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஆலயத்திலேயே அமர்ந்து கொண்டு நாம் வாங்கிய கடன் தொகையிலிருந்து சிறிய அளவாவது உரியவருக்கு திருப்பி செலுத்தி விட வேண்டும். இவை அனைத்தும் இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அறுசுவை உணவை சமைத்து குறைந்தபட்சம் இரண்டு நபருக்காவது அன்னதானம் தர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட கடன் ரீதியான அனைத்து பிரச்சினைகளையும் முருகப் பெருமான் தீர்த்து வைப்பார் என்றும் மேற்கொண்டு புதிதாக எந்தவித கடனும் வாங்காத அளவிற்கு நம்முடைய செல்வ நிலை உயரும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு

ஒவ்வொரு மாதத்திலும் இந்த மைத்ரேய முகூர்த்தம் வரும். இந்த அக்டோபர் மாதத்தில் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தில் இந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு கடனை திருப்பி செலுத்தினோம் என்றால் கடன் பிரச்சனையற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்