- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவராத்திரியுடன் சேர்ந்து வரும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு

நவராத்திரியுடன் சேர்ந்து வரும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வோம். அதிலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழக்கூடிய இந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி சமயத்தில் வரக்கூடிய பஞ்சமி திதி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. பொதுவாகவே பஞ்சமி என்பது வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்குரிய திதியாக கருதப்படுகிறது. அதுவும் அம்பிகையை வழிபாடு செய்யும் நவராத்திரி சமயத்தில் வரக்கூடிய பஞ்சமி திதிக்கு அதிக அளவில் சக்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அக்டோபர் மாதம் ஏழாம் தேதி காலை 7 :22 மணிக்கு மேல் பஞ்சமி திதி என்பது ஆரம்பம் ஆகிறது. அதனால் 7:22 மணியில் இருந்து 8:15 வரை வாராகி அம்மனை வழிபாடு செய்யலாம். இந்த நேரத்தில் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் காலை 9:15ல் இருந்து 10:15 வரையும், மாலை 6:00 மணிக்கு மேல் தங்களுடைய வசதிக்கேற்ப எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாராஹி அம்மனை வழிபாடு செய்யலாம். பணவசியம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்றைய தினம் வரக்கூடிய குளிகை நேரமான மதியம் 1:30 மணியிலிருந்து 3:00 மணிக்குள் வாராகி அம்மனை வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

வீட்டில் இருக்கக் கூடிய வாராகி அம்மனின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் தீபம் ஏற்றும் வழக்கம் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் நெய் ஊற்றி 5 திரி போட்டு தேங்காய் தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படி தேங்காய் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒரு தட்டில் ஐந்த அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தட்டை வெறும் தட்டாக வைக்க கூடாது. அதில் நவதானியங்களை வைக்கலாம், சில்லறை காசுகளை வைக்கலாம், வாசனை மிகுந்த மலர்களை வைக்கலாம் அல்லது அட்சதையை வைக்கலாம். இதில் ஏதாவது ஒன்றை பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த அகல் விளக்கு ஆனது வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வாராகி அம்மனுக்கு பிடித்தமான கிழங்கு வகைகளையும், பானகம், மாதுளம் பழம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் அம்மனுக்கு செம்பருத்தி பூ மாலை, செவ்வரளி மாலை, பன்னீர் ரோஜா மாலை போன்ற சிவப்பு நிற மலர்களை பயன்படுத்தி மாலை கட்டி போட்டு வழிபாடு செய்ய வேண்டும். மங்களக் காரியங்கள் தடைப்பட்டு இருக்கும் பட்சத்தில் வாராஹி அம்மனுக்கு மஞ்சள் மாலை கட்டி அணிவித்து வழிபாடு செய்யலாம். அன்றைய தினம் திங்கட்கிழமை என்பதால் சிவபெருமானுக்குரிய வில்வ இலைகளை வைத்து வாராகி அம்மனுக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்வது அதிக பலனை தரும்.

- Advertisement -

அன்றைய தினம் காலையிலேயே ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி வாராகி அம்மனின் பாதத்தில் வைத்து விட வேண்டும். எந்த நேரத்தில் நீங்கள் வழிபாடு செய்யப் போகிறீர்களோ அந்த நேரத்தில் இந்த எலுமிச்சம் பழத்திலிருந்து இரண்டு மூன்று துளிகள் எலுமிச்சம் சாறை கையில் பிழிந்து அதனுடன் மஞ்சளை சேர்த்து இரண்டு கைகளிலும் நன்றாக தடவிக் கொண்டு பிறகு இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பித்தால் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

மீதம் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை பிழிந்து வீடு முழுவதும் தெளிப்பதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் வாராகி அம்மனின் மந்திரத்தை குறைந்தபட்சம் 48 முறையாவது கூறி வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது என்பது மிகவும் சிறப்பு. “ஓம் வாராஹி தாயே போற்றி ஓம்” என்னும் இந்த எளிமையான மந்திரத்தை கூறினால் போதும். வாராகி அம்மனின் அருளால் நாம் என்ன வேண்டுதல் வைத்தோமோ அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: மன பயம் நீக்கும் கமல பந்தம்

இந்த முறையில் வளர்பிறை பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது அம்மனின் அருளால் நாம் வேண்டிய அனைத்தும் நமக்கு கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்