- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதொழில் லாபகரமாக நடக்க வழிபாடு

தொழில் லாபகரமாக நடக்க வழிபாடு

- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றால் அதற்கு அவர்களுடைய வேலை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அந்த வேலை எந்த அளவிற்கு நல்ல வேலையாக இருக்கிறதோ, எந்த அளவிற்கு அதிக வருமானம் தரக்கூடிய வேலையாக இருக்கிறதோ அதற்கேற்றப்போர் அவர்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் என்றுதான் கூற வேண்டும்.

இந்த சமுதாயத்தில் அப்படி மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கக்கூடிய நபர்களாக கருதப்படுபவர்கள் சொந்தமாக வேலை செய்பவர்கள் தான். தங்களுடைய தொழிலை சொந்தமாக அமைத்துக் கொண்டு அதில் வரக்கூடிய லாபம் நஷ்டம் என்று அனைத்தையும் பார்த்து அந்த நஷ்டத்தில் இருந்து லாபத்தை அதிகரிக்கவும் மேலும் மேலும் பன்மடங்கு உயரவும் தொழிலில் தான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அப்படி நினைத்து ஆரம்பித்தவர்கள் பலர் இருந்தாலும் அதை வெற்றிகரமாக செயல்படுத்துபவர்கள் ஒரு சிலரே. அப்படி செய்யும் தொழிலை வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் நடத்துவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தொழில் லாபகரமாக நடக்க வழிபாடு

ஒருவர் தான் செய்யக்கூடிய தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் முதலில் அவருக்கு தெரிந்த தொழிலை அவர் செய்ய வேண்டும். அந்த தொழிலில் அவருக்கு முழு அறிவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அவரால் அந்த தொழிலை சிறப்பாக செய்ய முடியும். இப்படி அனைத்தும் தெரிந்திருந்தும் ஒரு சிலரால் அவர்களுடைய தொழிலில் வெற்றி அடைய முடியவில்லை. இதற்கு ஜாதகங்களும் ஒரு வித காரணமாகவே அமைகின்றன.

ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அல்லது அவர்களுடைய தொழிலில் ஏதாவது தடைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு அற்புதமான கடவுளாக திகழ்த்தப்படுபவர் தான் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானை நாம் தொடர்ச்சியாக வழிபடும் பொழுது நம்முடைய தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதற்கென்று சிறப்பான வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அந்த வழிப்பாட்டு முறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும். என்றைக்கு வேண்டுமானாலும் நாம் ஆரம்பித்துக் கொள்ளலாம். இதற்கு நாம் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்தை தான் தேர்வு செய்ய வேண்டும். விநாயகருக்கு ஒரே ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டாலே போதும். வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆனால் இதில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த நேரத்தில் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோம் என்பதுதான்.

நம்முடைய தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால் நமக்கு லாபம் அதிகரிக்க வேண்டும். இந்த லாபத்தை நாம் பெற வேண்டும் என்றால் கௌரி பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு நாளும் லாபம் என்று ஒரு குறிப்பிட்ட நேரம் கொடுத்து இருப்பார்கள். அந்த நேரத்தில் சென்று விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து அந்த நேரம் முழுவதும் விநாயகப் பெருமானை நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய தொழிலில் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தையுமே தகர்த்தெறிந்து நமக்கு சிறப்பான லாபகரமான தொழிலை விநாயகப் பெருமான் அமைத்து தருவார்.

இதோடு மட்டுமல்லாமல் யார் தொழில் செய்கிறார்களோ அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளன்று விநாயகப் பெருமானுக்கு தேங்காயில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவதன் மூலமும் அவர்களுடைய தொழிலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தடைகளும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:ஆசைப்பட்ட வேலை கிடைக்க சூரிய வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு மனதுடனும் சிரதையுடனும் விநாயகப் பெருமானுக்கு ஏற்றி வழிபாடு செய்ய அவர்களுடைய தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி லாபகரமான சிறப்பான தொழிலை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்