நாளை புரட்டாசி மாதத்தில் நான்காவது சனிக்கிழமை. கடைசி சனிக்கிழமை, விஜயதசமையுடன் சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் பெருமாள் வழிபாட்டை மிக மிக எளிமையான முறையில், அதே சமயம் சக்தி வாய்ந்த முறையில் நம்முடைய வீட்டில் எப்படி மேற்கொள்வது. திருமலையின் மீது இருந்து இறங்கி வந்து, நம் வீட்டில் அமர்ந்து இத்தனை வாரங்களாக நமக்கு அருள் புரிந்த பெருமாளை, மீண்டும் திருமலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய வேலையை எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை வழிபாடு
கடந்த மூன்று வாரங்கள் தளிகை போட தவற விட்டவர்கள், நாளைய தினம் நான்காவது வாரம் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு தளிகை போடலாம். நாளை பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. ஆகவே நாளைய தினம் பெருமாளுக்கு தளிகை போட்டால் அது இரட்டிப்பு பலனை கொடுக்கும்.
நாளைய தினம் மாவிளக்கு போட்டு பெருமாளுக்கு தளிகை இடலாம். தவறு கிடையாது. கலவை சாதம், மற்ற பிரசாதங்கள் செய்தும் தளிகை இடலாம். இது எல்லாம் எங்களால் செய்ய முடியாது, தளிகை போடக்கூடிய அளவுக்கு எங்களுக்கு நேரமும் இல்லை ஆனால் நாங்கள் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்றால் என்ன செய்வது.
நாளைய தினம் ‘கருப்புக் கொண்டே கடலை சுண்டல், பால் பாயாசம்’. இது இரண்டையும் செய்து பெருமாள் முன்பு வைத்து பெருமாளே இத்தனை நாட்களாக நாமத்தின் ரூபத்தில் எங்கள் வீட்டில் குடியிருந்து, அருளாசியை வழங்கி வந்த நீ, இந்த வாரம் எங்களுடைய நெய்வேத்தியத்தை ஏற்றுக்கொண்டு திருமலைக்கு சென்று வருவாயாக என்று சொல்ல வேண்டும்.
பெருமாள் மட்டும் தான் திருமலைக்கு செல்வார். அவர் நமக்கு அருளிய ஆசீர்வாதம் நம்முடனே இருக்கும். அவர் நமக்காக தந்த செல்வங்கள் நம் வீட்டில் நிலையாக தங்கும். பெருமாளின் வீடு, திருமலை தானே. ஆகவே உங்கள் வீட்டில் குடி கொண்டிருக்கும் பெருமாளை நாளைய தினம் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை சந்தோஷமாக அவரது சொந்த வீட்டுக்கு திருப்பி அனுப்பி வையுங்கள்.
மகிழ்ச்சியோடு பெருமாள் உங்களுக்கு தேவையான வரங்களை எல்லாம் வாரி வாரி கொடுத்துவிட்டு, செல்வ வளங்களை எல்லாம் வாரி வாரி கொடுத்துவிட்டு, திருமலைக்கு சென்று விடுவார். நெய்வேதியமாக வைத்த பிரசாதத்தை நீங்களும் சாப்பிடலாம். முடிந்தால் இந்த பிரசாதத்தை இயலாதவர்களுக்கு தானமாக கொடுங்கள். இரட்டிப்பு பலனை பெறுவீர்கள்.
நாளை விஜயதசமி. நவராத்திரியின் 10வது நாள். காலை பெருமாளை வழிபாடு செய்து விட்டீர்கள். மாலை வெள்ளை கொண்டை கடலை சுண்டல், சர்க்கரை பொங்கல் செய்து பூஜை அறையில் வைத்து நெய்வேதியம் செய்து முப்பெரும் தேவியரையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்வது நன்மையை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: பிள்ளைகள் நன்றாக படிக்க சரஸ்வதி பூஜை வழிபாடு
கொஞ்சம் சிரமம் பார்க்காமல் நாளைய தினம் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாடுகளை பின்பற்றினால் மனநிறைவோடு சேர்த்து உங்களுடைய வீட்டில் நிறைய நல்லது நடக்க தொடங்கும். லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.