- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சனைகள் வெளியேற விநாயகர் வழிபாடு

பிரச்சனைகள் வெளியேற விநாயகர் வழிபாடு

- Advertisement -

வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு பார்த்தால், எந்த பிரச்சினையை முதலில் சமாளிப்பது, எந்த பிரச்சினையை இறுதியாக சமாளிப்பது, என்று பெரிய போராட்டமே வந்துவிடும். அந்த அளவுக்கு பிரச்சனைகள் சூழ்ந்துள்ள ஒரு இடம் வீடு. உங்களுடைய வீட்டிலும் உங்களுடைய மனதிலும் உங்களைச் சுற்றியும் பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கிறதா.

அதிலிருந்து வெளிவர ஐப்பசி மாதம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஆன்மீகம் சொல்லும் வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமாக இந்த வழிபாட்டை செய்து பாருங்கள் 48 நாளில் உங்களுடைய கஷ்டம் தீரும்.

- Advertisement -

பிரச்சனை தீர்க்கும் பிள்ளையார் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு உங்களுக்கு தேவையான பொருள் ஒன்று தான். வெள்ளருக்கு கட்டை. இந்த வெள்ளருக்கு கட்டை நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். அவர்களே சாப நிவர்த்தி செய்து கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அந்த கட்டையை வாங்கி முதலில் மஞ்சள் தண்ணீரில் கழுவி விடுங்கள். பிறகு அதற்கு மேலே கொஞ்சமாக மஞ்சள் தடவி குங்குமப்பொட்டு வைத்து தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டு பக்கத்தில் விநாயகர் கோவில் ஏதாவது இருந்தால் அந்த அர்ச்சகரிடம் இந்த கட்டையை கொடுத்து, இந்த கட்டையை விநாயகரது பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தரச் சொல்லுங்கள். கோவிலுக்கு செல்லும்போது அருகம்புல், தேங்காய் பழம், பூ, இது எல்லாம் வாங்கி செல்ல வேண்டும். உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து அந்த வெள்ளருக்கு கட்டையை மீண்டும் வாங்கி வீட்டிற்கு வர வேண்டும்.

- Advertisement -

ஒரு மஞ்சள் துணியில் இந்த வெள்ளருக்கு கட்டையை வைத்து சுருட்டி, மஞ்சள் நூல் போட்டு கட்டி, உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடலாம். தினமும் தொடர்ந்து 48 நாள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி உங்களுக்கு இருக்கும் பிரச்சனை தீர வேண்டும் என்று விநாயகரை வேண்டி வெள்ளருக்கு கட்டைக்கு ஊதுவத்தி காண்பித்து வழிபாடு செய்தால் உங்களுடைய குடும்ப பிரச்சினை அனைத்தும் ஒவ்வொன்றாக தீரும்.

எந்தப் பிரச்சனை சரியாக வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்கவில்லை, பிள்ளைகளுக்கு உடம்பு சரியாகவில்லை, படித்த பிள்ளைக்கு வேலை கிடைக்கவில்லை அல்லது திருமண வயதான குழந்தைகளுக்கு நல்ல வரணும் அமையவில்லை, கணவருக்கு தீய பழக்கம் இருக்கிறது, அவர் அதிலிருந்து வெளிவர வேண்டும் அல்லது மாமியார் பிரச்சனை, மருமகள் பிரச்சனை, இப்படி என்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி அந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட இந்த வெள்ளருக்கு கட்டையால் மட்டும் தான் முடியும்.

இதையும் படிக்கலாமே: சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி

அதுவும் விநாயகர் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொண்டுவரப்பட்ட வெள்ளெருக்கு கட்டைக்கு அதீத சக்தி உண்டு. நம்பிக்கை இருந்தால் இதை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தில் படிப்படியாக நிம்மதி பிறக்கும். படிப்படியாக துன்பங்கள் குறையும். அதை கண்கூடாக உங்களால் காண முடியும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில் விநாயகர் உங்களுடைய வேண்டுதலை சீக்கிரம் நிறைவேற்றி வைக்க வேண்டி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்