நிறைய பேர் இரவு தூங்கச் செல்லும்போது, நாளைக்கு இந்த உலகத்தையே புரட்டிப் போடக்கூடிய அளவுக்கு ப்ளான் போடுவாங்க. காலையில எந்திரிக்கணும், அந்த வேலையை முடிக்கணும், இந்த வேலையை முடிக்கணும், எந்த வேலையிலும் பின்னடைவு இருக்கக் கூடாது. சுறுசுறுப்போடு இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்குவார்கள்.
ஆனால் காலையில் எழுந்திருக்கவே தாமதம் ஆகிவிடும். பிறகு செய்யக்கூடிய வேலைகளில் சோம்பேறித்தனம் இருக்கும். கடைசியில் இந்த வேலையை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று, எல்லாவற்றையும் தள்ளி வைப்போம். அலுவலகம் செல்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், படிப்பவர்கள், வீட்டில் குடும்பத் தலைவிகளாக இருப்பவர்கள் எல்லோருக்குமே இந்த சோம்பேறித்தனம் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளி விடுகிறது.
வேலை நேரத்தில் வரும் தூக்கம் வாழ்க்கையை அதல பாதாளத்தில் தள்ளி விடுகிறது. இதிலிருந்து விடுபட வேண்டும் வேலை செய்யும் போது தூக்கம் எல்லாம் வரக்கூடாது, மனது தேவையற்ற விஷயங்களில் அலைபாயக் கூடாது. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், என்ற உத்வேகம் கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. எந்த அம்பாளை வழிபாடு செய்வது. ராஜ வாழ்க்கை வேண்டுமென்றால், ராஜாவைப் போல சுகபோகமாக வாழ வேண்டும் என்றால், ராஜராஜேஸ்வரி அம்பாள் வழிபாட்டை செய்வதுதான் ஒரே சிறப்பு.
அதுவும் எப்படி தெரியுமா. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். பூஜை அறையில் வந்து குலதெய்வத்தையும், ராஜ ராஜேஸ்வரி அம்மனையும் நினைத்து விளக்கை ஏற்றி வைத்து விட வேண்டும். சூரியன் உதயமாக கூடிய அந்த சமயத்தில் நீங்கள் வெட்ட வெளியில் இருக்க வேண்டும். கிழக்கு பார்த்தவாறு சூரியன் உதிப்பார் அல்லவா.
அந்த இளஞ்சிவப்பு சூரியனை பார்த்துக்கொண்டே, பின் சொல்லப்படும் இந்த ராஜராஜேஸ்வரி அம்மன் மந்திரத்தை சொன்னால், உங்கள் வாழ்க்கையில் சோம்பேறி தனமே இருக்காது. அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக தான் இருப்பீர்கள். அடுத்த நாள் வேலையையும் சேர்த்து இன்றைய செய்து விடுவீர்கள். அந்த அம்பாளின் மந்திரம் என்ன தெரிந்து கொள்வோமா.
ராஜராஜேஸ்வரி அம்மன் மந்திரம்
ஓம் சங்கு ராங்கு சடாட்சர நமசியவ தேவி
பிரணவ வாலை அகார – உகார – மகார
ஸ்திரி ஸ்ரீம் ஐம் மனோன் மணி
ருத்திரா ருத்திரி சர்வலோக தயாநிதி
சர்வ ஜீவ வசிகரி
சர்வ மோக மோகினி வா வா வருக வருக
சர்வ சகல வசி வசி ராஜ மோக வசி
சர்வ லோக சர்வ புவன
ராஜ ராஜேஸ்வரி வசி வசி
இந்த மந்திரத்தை படித்தால் சுறுசுறுப்பும் விடாமுயற்சியும் வெற்றியும் கிடைப்பதுடன் உங்களை தேடி ராஜ வாழ்க்கை வரும். நினைத்த வேலை கிடைக்கும், அரசாங்க வேலை கிடைக்கும், நினைத்தபடி கை நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் என்பதே வராது.
இதையும் படிக்கலாமே: காரிய தடையை நீக்கி பண வரவை தரும் பரிகாரம்
இந்த வழிபாட்டிற்கு இத்தனை நாள், அத்தனை நாள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் இந்த வழிபாட்டை செய்பவர்களை, ராஜராஜேஸ்வரி அம்மனே கரம் பிடித்து வாழ்க்கையை நடத்திச் செல்வாள். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் ராஜராஜேஸ்வரி அம்பாள் ஆன்மீகம் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்