நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடிய தெய்வமாகவும், நம்முடைய எதிரிகளை தவிடு பொடியாக்கக்கூடிய தெய்வமாகவும், நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அடிக்க கூடிய தெய்வமாகவும் திகழக்கூடியவள் வாராகி அம்மன். இந்த கலியுகத்தில் அதிகமான நபர்களால் இஷ்ட தெய்வமாக பாவிக்கப்பட்டு வணங்கக்கூடிய தெய்வமாகவும் வாராகி அம்மன் திகழ்கிறாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய திதியான பஞ்சமி திதி அன்று நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பெரும் கஷ்டத்தை தீர்க்கும் பஞ்சமி பரிகாரம்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும் அந்த ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதற்கு அந்த தெய்வத்திற்குரிய நாளை நம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வாராகி அம்மனின் அருளை பெறுவதற்கும் வாராகி அம்மனால் கிடைக்கக்கூடிய நன்மைகளை முழுமையாக பெறுவதற்கும் வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி திதியில் நாம் சில பரிகாரங்களை செய்யலாம். அந்த பரிகாரங்களில் ஒன்றை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
பஞ்சமி திதி என்பது அக்டோபர் மாதம் 21ஆம் தேதி காலை 9:31 மணிக்கு மேல் தொடங்குகிறது. அன்றைய தினத்தில் பஞ்சமி திதி தொடங்கிய பிறகு வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் வாராகி அம்மனுக்கு வழிபாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும். வாராஹி அம்மன் வழிபாடு செய்யாதவர்கள், விரதம் இருந்து வழிபாடு செய்யாதவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம்.
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிண்ணம் இல்லாத பட்சத்தில் ஒரு சுத்தமான அகல் விளக்கை கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் உடையாத நல்ல ஏலக்காயாக பார்த்து இரண்டு ஏலக்காயை வைக்க வேண்டும். பிறகு அதனுடன் ஐந்து மொட்டு உடையாத நல்ல கிராம்பாக பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து அரை ஸ்பூன் அளவிற்கு பெருஞ்சீரகம் என்று கூறக்கூடிய சோம்பை வைக்க வேண்டும். பிறகு இதனுடன் இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும்.
இதை நம்முடைய வீட்டு பூஜை அறையில் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இது அப்படியே இருக்கட்டும். இதில் இருக்கக்கூடிய ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பச்சை கற்பூரம் இவை அனைத்தும் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்கக்கூடியதாகவும், நம்முடைய கஷ்டங்களை விளக்கக்கூடியதாகவும், அதே சமயம் பணவரவை அதிகரிக்க கூடிய பொருட்களாகவும் திகழ்கின்றன. அடுத்த பஞ்சமி திதி வரும் பொழுது பஞ்சமி திதிக்கு முதல் நாள் இரவு இந்த பொருட்களை அப்படியே எடுத்துக்கொண்டு நிலை வாசலுக்கு வெளியே வைத்து எரித்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் கஷ்டங்களும் எரிந்து சாம்பலாக போய்விடும் என்று கூறப்படுகிறது.
வாராகி அம்மனை முழுமனதோடு நம்பி பஞ்சமி திதி அன்று இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அவை காணாமல் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.