- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் பணம் சேர செய்யக்கூடாத தவறு

வீட்டில் பணம் சேர செய்யக்கூடாத தவறு

- Advertisement -

உழைக்கின்ற பணத்தில் சிறு சேமிப்பை செய்தால் தான் கொஞ்சமாவது நாம் முன்னேற முடியும். இப்படி வரும் பணம், அப்படி மொத்தமாக போய்விட்டால், பணம் சேர்க்கவே முடியாமல் போய் விட்டால், உங்களிடம் தரித்திரம் இருக்கிறது என்று அர்த்தம். இந்த தரித்திரத்தை விரட்டி அடித்து, பணம் சேர்த்து வைக்க வழி தேடுவது எப்படி? என்னும் சூட்சமத்தை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

பணம் என்பது நிலையான ஒரு விஷயம் அல்ல! இன்று ஒருவர் கையில் இருந்தால், நாளை வேறொருவர் கையில் இருக்கும். இப்படி நாளுக்கு நாள் உலகம் எங்கும் சுற்றித் திரியும் இந்த பணம் ஆனது, ஒரு இடத்தில் கொஞ்ச நாளாவது நிரந்தரமாக தங்கி, சேமிப்பை தக்க வைக்க வீட்டில் நீங்கள் இந்த செயல்கள் எல்லாம் செய்யாமல் இருக்க வேண்டும்.

- Advertisement -

முதலில் வீட்டில் பணம் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். பணத்தை வீட்டிலிருந்து துடைத்து வைக்க கூடாது. மணி பர்சில் மட்டும் பணம் இருந்தால் போதுமா? பணம் தங்கக்கூடிய எல்லா இடங்களிலும் சில்லறை காசுகள் முதல் நோட்டு வரை எல்லா பணமும் இருக்க வேண்டும். குறிப்பாக அன்னபூரணி குடிகொண்டுள்ள சமையல் அறையில் பணம் இருக்க வேண்டும். அந்த காலத்தில் எல்லாம் அம்மாக்கள் மசாலா டப்பாவில் பணம் போட்டு வைப்பதை பார்த்திருப்போம். புளி டப்பா, பருப்பு டப்பா என்று எல்லா இடங்களிலும் பணத்தை மறைத்து வைப்பார். இதெல்லாம் பணத்தை சேமிக்கும் சூட்சம விதியாகும்.

அடிக்கடி பணத்தை எண்ணிப் பார்க்க கூடாது என்பார்கள். சேர்த்து வைக்கும் பணத்தை அடிக்கடி எண்ணி பார்த்தால், கண்டிப்பாக பணம் சேராது. வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என்று தனித்தனியாக பணத்தை சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு உண்டியல் கொடுத்து சேமித்து வைக்க பழகி கொடுங்கள். கோவிலுக்கு செல்ல தனியாக எப்பொழுதும் ஒரு மண் உண்டியல் வைத்துக் கொள்ளுங்கள். உண்டியலில் பணம் போடும் பொழுது கஞ்சத்தனமாக சில்லறைகளை மட்டும் போடாதீர்கள், நோட்டுகளையும் சேர்த்து போடுங்கள்.

- Advertisement -

எங்கெல்லாம் பணத்தை மறைத்து வைத்து சேமிக்க முடியுமோ, அங்கெல்லாம் பணத்தை ஒளித்து வையுங்கள். பணத்தை சூட்சமமாக நீங்கள் ஒளித்து வைக்கும் பொழுது அது மென்மேலும் சேரும். “காற்றுள்ள போதே, தூற்றிக் கொள்” என்னும் பழமொழிக்கு ஏற்ப காசு உங்களிடம் எல்லா நேரங்களிலும் அதிகமாக இருக்காது. இருக்கும் பொழுது பத்திரப்படுத்துங்கள். சமையலறையில் சமையல் செய்யும் பெண்கள் கையில் பணம் அதிகமாக சேமித்து வைக்கக்கூடிய யோகமும் உண்டு.

இதையும் படிக்கலாமே:
தம்பதிகளுக்குள் சண்டை வராமல் தடுக்க

பெண்களின் கையில் சுக்கிரன் வாசம் செய்கிறார் எனவே சுக்கிர பகவானுடைய அருள் உள்ள பெண்களுக்கு தான் பணத்தை சேர்த்து வைக்கும் குணமும் அதிகம் இருக்கும். இத்தகைய பெண்களின் கைகளால் சமைக்கும் உணவு பொருளை நாசம் செய்யக் கூடாது. இது பணத்தையும் சேரவிடாமல் நாசம் செய்து விடும். அதாவது சமைக்கும் பொழுது கவனமுடன் சமைக்க வேண்டும். உணவுப் பொருட்கள் அடிபிடித்தால் அங்கு தரித்திரம் குடிகொள்ளும், இதனாலும் பணம் சேராமல் இருக்கும் எனவே சமைக்கும் பொழுது அடிபிடிப்பது, கரித்துணி எரிவது போன்ற சம்பவங்கள் வீட்டில் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பால் திரிவது, பால் பாத்திரம் அடிபிடிப்பது, சாதம் குழைவது, உணவில் உப்பு அதிகமாக சேர்ப்பது போன்ற விஷயங்களை செய்தால் தரித்திரம் தாண்டவம் ஆடும். இதனாலும் பணம் சேராமல் போக வாய்ப்புகள் உண்டு.

சற்று முன்