இன்று ஐப்பசி மாதம் 11ஆம் நாள் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை இன்று 4 முக்கியமான சிறப்புகள் இருக்கின்றன. இன்றைய நட்சத்திரம் பூரம் நட்சத்திரம். இன்றைய திதி ஏகாதசி திதி. இந்த திதியை நாம் இந்திர ஏகாதேசி என்றும் கூறுவோம். அதோடு மட்டுமல்லாமல் இன்று வாஸ்து நாளும் கூட . இந்த மூன்று சிறப்புகளோடு மற்றும் ஒரு முக்கியமான சிறப்பு இருக்கிறது. அதுதான் சங்கரன் கோவிலில் நடக்கக்கூடிய திருக்கல்யாணம்.
சங்கரன்கோவிலில் சங்கரநாராயணாக அதாவது பாதி சிவனாகவும் பாதி பெருமாளாகவும் அருள்பாளிக்க கூடிய தெய்வமாக திகழ்கிறார். அந்த ஆலயத்தில் கோமதி அம்மனுக்கும் சங்கரநாராயணனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் அற்புதமான நாளாக இந்த நாள் திகழ்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த நாளில் எப்படி வழிபட்டால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக வாஸ்து நாள் என்றால் அன்றைய தினத்தில் வாஸ்து ரீதியான காரியங்களை செய்வார்கள். மேலும் ஏகாதேசி பெருமாளுக்கு உரிய நாளாக கருதப்படும். அதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் பெருமாளுக்கு விரதம் இருப்பதும் சிறப்பான ஒன்றாகவே திகழ்கிறது. மேலும் இன்றைய நாளில் பூரம் நட்சத்திரம் வருகிறது. பூர நட்சத்திரம் என்பது சுக்கிரனுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. அதனால் இன்றைய தினத்தில் நாம் வழிபாடு செய்வதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.
ஆடிப்பூரம் எந்த அளவிற்கு விசேஷமோ அதே அளவிற்கு ஐப்பசி பூரமும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு நம்முடைய பூர்வ புண்ணியத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து சிவாலயங்களிலும் இன்றைய தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு மட்டுமல்லாமல் புட்டை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யும் பழக்கமும் பலரது இல்லங்களில் நடக்கும்.
சிறப்பு வாய்ந்த இந்த நாளில் வீட்டில் கும்பம் வைத்து அந்த கும்பத்தை அம்பாளாக பாவித்து வழிபாடு செய்வது என்பது நல்ல பலனை தரும். அப்படி கும்பம் வைக்க இயலாதவர்களோ அல்லது பழக்கமில்லாதவர்களோ அம்பாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரித்து அம்பாளுக்கு பழங்கள் மற்றும் இனிப்பு வகைகளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இயன்றவர்கள் இனிப்பு பூட்டை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யும்பொழுது பல நல்ல பலன் கிடைக்கும். இந்த பொருட்களை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு அபிராமி அந்தாதியின் இருக்கக்கூடிய 24 ஆம் பாடலை பாடிக்கொண்டு அம்பாளுக்கு கற்பூர தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதி 24ம் பாடல்
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளும், சிவபெருமானின் அருளும், அம்பாளின் அருளும், சுக்கிர பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: 29.10.2024 அன்று எம தீபம் ஏற்ற வேண்டிய சரியான நேரம்
பல அற்புதமான சிறப்புகள் மிகுந்த இன்றைய நாளில் மறவாமல் அம்பிகையை இந்த பாடலை கூறி வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்