ஒரு சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி என்றதுமே நம்முடைய நினைவிற்கு இனிப்பு பலகாரங்கள், பட்டாசுகள், புத்தாடைகள், கண்களுக்கு தெரியும். ஆனால் இன்று மகாலட்சுமியும் குபேரரும் தான் நம்முடைய நினைவுக்கு வருகிறார்கள். எந்த பூஜை செய்தால் பணம் கஷ்டத்தில் இருந்து வெளிவரலாம், எந்த பூஜை செய்தால் கடன் சுமை குறையும்.
எந்த பூஜை செய்தால் வருமானம் பெருகும் என்றுதான் மக்களின் மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தீபாவளி அன்று பல்லி பார்த்தால் பலன்
பல்லி என்று சொன்னதுமே சில பேர் அலறி அடித்து ஓடுவார்கள். பல்லியை பார்த்தால் 10அடி தூரத்திற்கு எகிறி விடுவார்கள். ஆனால் தீபாவளி தினத்தில் மட்டும் அப்படி செய்யக்கூடாதாம். பொதுவாகவே பல்லியை விரட்ட கூடாது. அது குலதெய்வ அம்சம். மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்கிறது நம்முடைய இந்து சாஸ்திரம். அதிலும் இந்த தீபாவளி அன்று உங்கள் கண்களுக்கு பல்லி தென்பட்டால், அந்த மகாலட்சுமியின் தரிசனமே உங்களுக்கு கிடைத்து விட்டதாக அர்த்தம் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம்.
இன்று 31.10.2024 தீபாவளி பண்டிகை. இன்றைய தினம் உங்களுடைய வீட்டில் எங்காவது பல்லியை பார்த்தால் உங்கள் குலதெய்வத்தையும் மகாலட்சுமியும் மனதார நினைத்துக் கொண்டு, உங்கள் குடும்ப சுபிட்சத்துக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இன்றோடு எங்களுடைய துன்பங்கள் நிறைவடைய வேண்டும். புது வாழ்க்கை துவங்க வேண்டும். நிறைய செல்வ வளம் அதிகரிக்க வேண்டும்.
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, கொஞ்சம் அட்சதையை கொண்டு வந்து உங்களுடைய தலையில் நீங்களே போட்டுக் கொள்ளுங்கள். அதாவது மகாலட்சுமி தாய் உங்களுக்கு இந்த அட்சதையை போட்டு ஆசீர்வாதம் செய்ததாக அர்த்தம்.
பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் பூஜை அறையில் அச்சத்தை இருக்கும். உங்கள் வீட்டில் அட்சதை இல்லை என்றால் பச்சரிசியில் கொஞ்சமாக மஞ்சள் தூள், ஒரு சொட்டு நெய் விட்டு கலந்து அந்த அட்சதையை எடுத்து உங்கள் தலைமீது போட்டு ஆசீர்வாதம் செய்து கொள்ளுங்கள். இன்றைய நாள் முடிவதற்குள் எந்த நேரத்தில் நீங்கள் பல்லியை பார்த்தாலும் உங்களுடைய வேண்டுதலை பல்லியிடம் சொல்லி, அட்சதையை தலையில் போட்டுக் கொண்டால், நீங்கள் என்ன வேண்டுதல் வைத்தீர்களோ, அது அடுத்த வருடத்திற்குள் நிறைவேறும் என்பதுதான் நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: தீபாவளியன்று செய்ய வேண்டிய மகாலட்சுமி பூஜை
இது சில பேருக்கு மூட நம்பிக்கையாக தெரியலாம். இருந்தாலும் மக்களுடைய பலபேரின் விடா நம்பிக்கை எப்போதுமே மூடநம்பிக்கையாகாது. நம்பிக்கையோடு நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.