- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணப்பிரச்சினை தீர்க்கும் ஐப்பசி மூன்றாம் பிறை பரிகாரம்

பணப்பிரச்சினை தீர்க்கும் ஐப்பசி மூன்றாம் பிறை பரிகாரம்

- Advertisement -

ஐப்பசி மாதத்தில் வந்த லட்சுமி குபேர அமாவாசை என்பது மிகவும் சிறப்புக்குரிய அமாவாசையாக திகழ்ந்தது. அதை தொடர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறையும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. பொதுவாகவே ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனம் என்பது நமக்கு பல நன்மைகளை தரும் என்று பல பதிவுகளில் பார்த்திருப்போம். அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாம் பிறை நாளன்று நாம் செய்யக்கூடிய பரிகாரத்தால் நமக்கு இருக்கக்கூடிய பணப்பிரச்சனை அனைத்தும் தீரும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐப்பசி மூன்றாம் பிறை பரிகாரம்

மூன்றாம் பிறை வரும் நாளன்று சிவபெருமானையும் சந்திர பகவானையும் ஒருசேர வழிபாடு செய்பவர்களுக்கு பல அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறைக்கு ஒவ்வொரு விதமான பலன் இருக்கிறது. அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாம் பிறை என்பது நம்முடைய பண பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய மூன்றாம் பிறையாக கருதப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த மாதத்தில் வந்த அமாவாசை தான். இது லட்சுமி குபேர அமாவாசையாக கருதப்படுவதால் இதை தொடர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை என்பது நம்முடைய பண பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவக்கூடிய மூன்றாம் பிறையாக திகழ்கிறது. அன்றைய நாளில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது மாலை 5:34 மணியிலிருந்து 6:28 மணி வரை. இதற்கு காரணம் என்னவென்றால் அந்த நேரத்தில்தான் மூன்றாம் பிறை தரிசனம் என்பது உண்டாகும், இது பஞ்சாக ரீதியாக கூறப்பட்ட நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் பரிகாரம் செய்ய இயலாதவர்கள் நள்ளிரவு 12 மணி வரை செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு இரண்டு ரூபாயும், ஒரு கிராம்பும் வேண்டும். இரண்டு என்பது சந்திர பகவானுக்குரிய எண் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம்பை வைத்து நாம் செய்யக்கூடிய எந்த பரிகாரமாக இருந்தாலும் அந்த பரிகாரத்தின் மூலமாக நமக்கு ஜனவசியம் மற்றும் பண வசியம் ஏற்படும் என்பது பலரும் அறிந்ததே மேலும் இந்த கிராம்பு மகாலட்சுமிக்கு உரிய மூலிகை பொருளாக கருதப்படுவதால் நாம் கிராம்பை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது மகாலட்சுமியின் அருளும் நமக்கு கிடைக்கும்.

இதற்கு நாம் நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் மேற்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். வெறும் தரையில் அமரக்கூடாது. ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் தான் அமர வேண்டும். பிறகு நம்முடைய வலது கையில் இரண்டு ரூபாய் நாணயத்தையும், மொட்டு உடையாத நல்ல கிராம்பாக பார்த்து ஒரு கிராம்பையும் வைத்து மூடிக்கொள்ள வேண்டும். இந்த கையை நம்முடைய மடியில் வைத்துக் கொண்டு சந்திர பகவான் மற்றும் சிவபெருமானை மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்த பிறகு “ஓம் நிசாகராய வித்மஹே கலா நாதாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்” என்னும் சந்திர பகவானின் மூல மந்திரத்தை குறைந்தது 20 நிமிடமாவது கூற வேண்டும். அதிகபட்சம் 30 நிமிடம் கூட கூறலாம். மனதார எந்தவித இடையூறுகளும் இன்றி இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு உங்களுடைய பணம் ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும், கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கவரிலோ அல்லது வெள்ளை நிற பேப்பரில் இந்த இரண்டு ரூபாய் நாணயத்தையும் கிராம்பையும் வைத்து மடித்து எந்த இடத்தில் நீங்கள் பணம் வைக்கிறீர்களோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் சந்திர பகவான், சிவபெருமான் மற்றும் மகாலட்சுமி இவர்கள் மூவரின் அருளால் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரு.ம் பணப்பிரச்சினை தீர்ந்துவிட்டாலே கடன் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்பது நாம் அறிந்ததே. மேலும் அடகில் வைத்த தங்க நகைகளை திருப்புவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ரூபாய் நாணயத்தை செலவு செய்யாமல் எப்பொழுதும் நம்முடனே வைத்துக் கொள்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:கந்த சஷ்டி விரதத்தின் பலனைப் பெற செய்ய வேண்டியது
இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாம் பிறை நாளன்று செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்