- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேலை கிடைக்கவும் தொழில் முன்னேற்றம் பெறவும் பரிகாரம்

வேலை கிடைக்கவும் தொழில் முன்னேற்றம் பெறவும் பரிகாரம்

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் போராடுவது பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக தான் பொருளாதார நிலை உயர்ந்தால் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்தவற்றை சுலபமாக எட்ட முடியும் அதற்காகத் தான் பாடுபட்டு படிப்பது தொழில் செய்வது தினந்தோறும் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பது அனைத்துமே பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு தான் அப்படி நான் எடுக்கும் அனைத்து முயற்சியும் தோல்வியிலே முடிகிறது என்றால் இந்த ஒரு தீப பரிகார முறை நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலை கிடைக்கவும் தொழில் முன்னேற்றம் பெறவும் ஏற்ற வேண்டிய தீபம்

இப்போதெல்லாம் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பது என்பது பெரும் பாடாக இருக்கிறது. அப்படி வேலை கிடைத்தாலும் அந்த வேலையில் நிம்மதியாக தொடர்ந்து வேலை செய்வது அதை விட பெரிய பிரச்சனை. இது ஒரு புறம் இருக்க, சரி ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக் கொள்வோம் என நினைத்து தொழில் ஆரம்பித்தால் அதிலும் முன்னேற்றம் இல்லாமல் நஷ்டம் அடைவது. இப்படி எதை செய்தாலும் அது தோல்வியிலே முடிந்தால் வாழ்க்கையில் எப்படித் தான் முன்னேறுவது.

- Advertisement -

இப்படியானவர்கள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை ஒரு முறை இப்படி வழிபாடு செய்தால் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை தான் இப்பொழுது நான் தெரிந்து கொள்ளப் போகிறோம் இந்த பரிகாரத்தை நாம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அங்கு தான் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரம் செய்ய நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் உங்கள் ராசியில் அன்று சந்திராஷ்டமம் இல்லாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் செய்யும் பொழுது நிச்சயம் அதற்கான பலனை பெறுவது கடினம். திருவண்ணாமலை சென்று முதலில் அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்து விடுங்கள். உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் அவரிடம் வைத்து விட்டு கிரிவலம் வாருங்கள்.

- Advertisement -

கிரிவலம் முடித்தவுடன் அருணாச்சலேஸ்வரருக்கு முன்பாக நீங்கள் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் அகல் விளக்கில் மட்டும் தான் ஏற்ற வேண்டும் அதே போல் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தான் ஏற்ற வேண்டும் இந்த அகல் விளக்கு உங்கள் வயது எத்தனையோ அத்தனை தீபம் ஏற்ற வேண்டும். குறிப்பாக உங்கள் வயது 30 என்றால் 30 அகல் தீபம் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் ஏற்றி முடித்த பிறகு தீபத்திற்கு முன்பாக அமர்ந்து அவரை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால், உங்கள் தொழில் நஷ்டத்தில் போகிறது என்றால் அதில் நல்ல முன்னேற வேண்டும் என்றாலும் அதற்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர சதுர்த்தி தீப வழிபாடு
இந்த முறையில் ஒரே ஒரு முறை தீபம் ஏற்றினால் போதும் உங்களை தொடரும் இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த தீப பரிகாரத்தோடு உங்கள் முயற்சியும் தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயம் அதற்கான நல்ல பலனை அருணாச்சலேஸ்வரர் அருள்வர். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்