இன்று எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்றால், அது இந்த பண பிரச்சினை தான். வறுமையில் இருந்து மீள வேண்டும் என்பதற்காகத்தான், இன்று எல்லோரும் ஓடி ஓடி உழைக்கின்றோம். ஒரு வேலை சாப்பிட கூட வழியில்லை, அரிசி பருப்பு வாங்கக்கூட வழியில்லை, என்பவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது, உங்களுடைய வறுமை நிலையானது மாறி செல்வ செழிப்பு உயரக்கூடிய நிலையை நிச்சயம் அடைவீர்கள்.
அதற்கு உண்டான ஒரு சிறப்பான வேல் மாறல் பாடலை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இப்போது கந்த சஷ்டி விரதம் ஆனது நடந்து கொண்டிருக்கிறது. இன்று கந்த சஷ்டியின் இரண்டாவது நாள். இந்த சஷ்டி விரதம் முடிவதற்குள் இந்த 6 நாட்களுக்குள் உங்கள் வீட்டில் இருக்கும் வேல் முன்பாகவோ அல்லது கோவிலில் இருக்கும் வேல்முன்பாகவோ, இந்த பாடலை படியுங்கள். 6 முறை இந்த பாடலை பாடினால் கூட போதும். அந்த முருகப்பெருமான் உங்கள் வீட்டில் இருக்கும் வறுமையை நீக்கி வைப்பார்.
அதாவது உங்கள் வீட்டில் யாரேனும் வேலை கிடைக்காமல் இருக்கலாம், வேலையில் பிரச்சனை, வருமானத்தில் பிரச்சனை இருக்கலாம், செய்யும் தொழில் லாபத்தை கொடுக்காமல் இருக்கலாம், அல்லது சில பேர் பணத்தை அடுத்தவர்களிடம் கொடுத்து ஏமாந்து இருக்கலாம். சொத்துபத்தில் பிரச்சனை இருக்கலாம். இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை சரி செய்வதற்கு உண்டான வேல் மாறல் பதிகம் இதோ இந்த பதிவில் உங்களுக்காக
வேல்மாறல் பதிகம்
தலத்தில்உள கணத்தொகுதி
களிப்பின் உணவழைப்ப(து) என
மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்க வளை(வு) ஆகும்.
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனது உளத்தில் உறை
கருத்தன்மயில் நடத்து குகன் வேலே
இந்த இரண்டு பாடலையும் சேர்த்து 6 முறை படிக்க வேண்டும். வேல் மாறலில் கொடுக்கப்பட்டிருக்கும் 8வது பாடல் தான் இது. வேல்மாறலில் ஒவ்வொரு பாடல் முடியும்போது இந்த திருத்தணியில் உதித்தருளும் பாடல் பாராயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வேல்மாறலில் கொடுக்கப்பட்டிருக்கும் 64 பாடலையும் பாராயணம் செய்ய முடியாது என்பவர்களுக்காக இந்த சிறப்பு பதிவு. வறுமையை நீக்கும் பதிவு.
இதையும் படிக்கலாமே: பொருளாதார முன்னேற்றம் ஏற்பட ஐப்பசி மூன்றாம் பிறை பரிகாரம்
செல்வ செழிப்பை போக்கும் பதிவு. இந்த பாடலை வேல் முன்பு அமர்ந்து படித்தால் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை உயிருக்கும் உணவு கிடைக்கும் என்பது பொருள். மகா கந்த சஷ்டி நாளில், நாம் இந்த பாடலை பாராயணம் செய்தால் நமக்கான வருமை நீங்காதா என்ன? அந்த முருகப்பெருமானின் அருள் ஆசி நமக்கும் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த பதிகத்தை படித்து பலன் பெறுவோம்.