ஔவையார் முருகனுக்காக நிறைய தமிழ் பாடல்கள் பாடியுள்ளார்கள். அவ்வை பாட்டிக்கு, நாவல் பழம் கொடுத்து முருகப்பெருமான் நிறைய பாடல்களை பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்தார். இப்படிப்பட்ட தமிழ் பாடல்களை மனமுருகப் பாடி முருகப்பெருமானை நாம், நம்முடைய வீட்டிற்கு அழைத்தால், அறுபடையில் இருக்கும் முருகனும் நம்முடைய வீட்டிற்கு வந்து அருள் புரிவார் என்பது இந்த பாடல்களுக்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை.
அப்படி ஔவையார் பாடிய ஒரு சிறப்புமிக்க பாடல், முருகனை நம் வீட்டிற்கு வர வைக்கும் பாடலைத் தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்று கந்த சஷ்டி விரதத்தின் மூன்றாவது நாள். திங்கட்கிழமை, அனைவருக்கும் அவரவர் வேலையை செய்வதற்கே நேரம் இருக்காது. இருப்பினும் இன்றும் முருகப்பெருமான் வழிபாட்டை நாம் தவறக்கூடாது. வெறும் பத்து நிமிடம் மட்டும் ஒதுக்கி கொள்ளுங்கள்.
பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானுக்கு விளக்கு ஏற்றி, செவ்வரளி பூக்களை போட்டு, இரண்டு வாழைப்பழம் நெய்வேத்தியம் வைத்து, முருகா முருகா முருகா என்று உருகி கூப்பிட்டு, உன் அருள் வேண்டி உன் பாதத்தைக் காண ஓடோடி வந்திருக்கின்றேன் என்று சொல்லி, முருகன் பாதங்களைச் சரணடைந்த பின் சொல்லக்கூடிய இந்த பாடல் வரிகளை படியுங்கள்.
இன்று படிக்க வேண்டிய முருகன் பாடல்
மலைதோறும் படை வீடு இருந்தாலும்
முருகா என் மன வீடு வந்து அமர்வாய்.
நீ மலையேறி விளையாடி சுவையான தமிழ் பாடல்
கனிவோடு தந்தருள்வாய்
கனிவோடு தந்தருள்வாய்!
ஆறுபடைவீடும்
அருள் வழங்கும் முருகா
அருகே நீ ஓடோடி வா!
மூவிரண்டு முகம் ஜொலிக்க ஆறிரண்டு கரங்களும்
ஆதரவு தர ஓடிவா!
இவ்வளவுதான். இந்தப் பாடலை படிப்பதற்கு முன்பு பூஜை அறையில் ஒரு நட்சத்திர கோலம் போட்டு அதில் ‘ஓம் சரவணபவ’ என்று எழுதி அதன் மேலே 6 மண் அகல் விளக்கை வைத்து ஏற்றி பிறகு, இந்த பாடலை படிப்பது இன்னும் கூடுதல் பலனை பெற்று தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்கவும் தொழில் முன்னேற்றம் பெறவும் பரிகாரம்
இந்த பாடலை படிப்பதற்கு இரண்டு நிமிடங்கள் கூட எடுக்காது முடிந்தால் 27 முறை இந்த பாடலை பாடி முருகன் முன்பு அமர்ந்து உங்களுடைய வழிபாட்டை மேற்கொண்டால், முருகன் மனம் குளிர்ந்து அறுவடை வீட்டிலிருந்தும் உங்களுக்கு அருள் ஆசியை வழங்குவான்.