- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீராத கஷ்டத்தை தீர்க்கும் சதுர்த்தி வழிபாடு

தீராத கஷ்டத்தை தீர்க்கும் சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்குரிய கிழமை என்பது நம் அனைவருக்குமே தெரியும். அந்த கிழமையில் சதுர்த்தி திதி வருவது என்பது அங்காரக சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது கந்த சஷ்டி விரத காலமும் கூட. இவை அனைத்தும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதோடு விநாயகரையும் வழிபாடு செய்தால் நம்மால் தீர்க்கவே முடியாது என்று நினைத்த கஷ்டமும் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தீராத கஷ்டத்தை தீர்க்கும் வழிபாடு

கந்தசஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. இருப்பினும் அந்தந்த கிழமைக்குரிய தெய்வத்தையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்குரிய கிழமை என்பதால் அன்றைய தினம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது அதீத பலனை தரும். இதோடு அன்றைய தினத்தில் வரக்கூடிய திதி என்பது சதுர்த்தி திதி. மேலும் இது வளர்பிறை சதுர்த்தியாகவும் கருதப்படுகிறது. சதுர்த்தி திதி என்றாலே விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவது உண்டு. அதனால் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சதுர்த்தி நாள் அன்று விநாயகப் பெருமானையும் முருகப்பெருமானையும் வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சதுர்த்திக்கு அங்காரக சதுர்த்தி என்ற பெயரும் உண்டு. செவ்வாய்க்கிழமை இரவு 10:29 வரை சதுர்த்தி திதி இருக்கிறது என்பதால் அன்றைய தினத்தில் ராகு காலம், எமகண்டத்தை தவிர்த்து மீதம் இருக்கும் எந்த நேரம் உங்களுக்கு வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் விநாயகப் பெருமானுக்கு வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய விநாயகப் பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சிலை வைத்திருப்பவர்கள் சிலையை தண்ணீரால் அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.

அவருக்கு அன்றைய தினத்தில் கண்டிப்பான முறையில் அருகம்புல் மாலையை போட வேண்டும். இயன்றவர்கள் அருகம்புல்லை வாங்கி தாங்களே தங்கள் கைப்பட மாலையாக தொடுத்து போடுவது என்பது நல்ல பலனை தரும். அடுத்ததாக விநாயகப் பெருமாளுக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். விநாயகப் பெருமானுக்கு முன்பாக மூன்று நல்லெண்ணெய் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். பிறகு “ஓம் பிள்ளையாரே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரத்தை உச்சரித்து முடித்த பிறகு தூப தீபம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை நிறைவு செய்வதற்கு முன்பாக பூஜை அறையில் மட்டும் நாம் தூபம் காட்டாமல் வீடு முழுவதும் தூபம் காட்ட வேண்டும். குறிப்பாக நம்முடைய வீட்டு நிலை வாசலுக்கு தூபம் காட்ட வேண்டும். இப்படி தூபம் காட்டி முடித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த முறையில் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானை நாம் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று அருகம்புல் மாலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:அட்சய யோகம் தரும் அங்காரக சதுர்த்தி வழிபாடு

சக்தி வாய்ந்த அங்காரக சதுர்த்தி நாளன்று இந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்