- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவட்டிக் கடனை தீர்க்கும் நவம்பர் மாத ரகசிய நாட்கள்

வட்டிக் கடனை தீர்க்கும் நவம்பர் மாத ரகசிய நாட்கள்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. காலையில் எழுவதிலிருந்து இரவு படுத்து உறங்குவது வரை நம்முடைய கையில் பணம் இருந்தால் தான் நம்மால் வாழ்க்கையை நடத்த முடியும். எதை எடுத்தாலும், எதற்கெடுத்தாலும் பணம் என்பது நமக்கு முன்பாக வந்து நிற்கிறது. அப்படிப்பட்ட பணம் நம்மிடம் தாராளமாக இருந்தால்தான் நம்முடைய தேவைகளை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அப்படி நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு இயலவில்லை என்னும் பட்சத்தில் நாம் வேறு வழியே இல்லாமல் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். அப்படி கடன் வாங்கும் பொழுது அந்த கடனுக்குரிய வட்டியை கட்ட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கும் ஆளாவோம்.

பலரும் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு முறை கடனை வாங்கிவிட்டு கடைசிவரை வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். வாங்கிய கடனை விட அதிக அளவு வட்டிகட்டி அதனால் மன வேதனையுற்று இருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். இப்படி இந்த கடன் பிரச்சினையும் வட்டிப் பிரச்சினையும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய முயற்சியோடு இந்த ஒரு சிறிய ரகசியத்தையும் தெரிந்து கொண்டால் விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும். அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நவம்பர் மாத ரகசிய நாட்கள்

ஒவ்வொரு மாதமும் பிறக்கும் பொழுதும் இந்த மாதத்திலாவது நமக்கு நல்லது நடக்காதா? நாம் எதிர்பார்த்த பணவரவு நம்மிடம் வராதா? கடனை அடைக்க முடியாதா என்று பலரும் பல விதங்களில் ஏங்கிக் கொண்டு இருப்பார்கள். தங்களுடைய கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நவம்பர் மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் இந்த முறையில் வட்டியை திருப்பிக் கொடுத்தால் அவர்களுடைய கடன் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது. அதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நவம்பர் மாதம் 5ம் தேதி சதுர்த்தியோடு சேர்ந்து வரக்கூடிய செவ்வாய்க்கிழமை. அன்று மதியம் 12 மணியிலிருந்து 1:30 மணிக்குள் நாம் வாங்கிய கடனுக்குரிய வட்டி தொகையை திருப்பிக் கொடுத்தோம் என்றால் அந்த கடன் விரைவிலேயே தீரும். இதேபோல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்துடன் கரிநாளும் சனிக்கிழமையும் சேர்ந்து வருகிறது. அன்றைய தினத்தில் காலை 6 மணியிலிருந்து 7:30 மணிக்குள் வட்டியை திருப்பிக் கொடுத்தோம் என்றாலும் கடன் பிரச்சனை தீரும். இதே போல் நவம்பர் மாதம் 18ம் தேதி திங்கட்கிழமை மதியம் 1:30 மணியிலிருந்து 3 மணிக்குள் வாங்கிய கடனுக்குரிய வட்டியை திருப்பி கட்டினோம் என்றாலும் இந்த கடன் பிரச்சினை என்பது தீரும் இந்த இந்த நாட்களில் வட்டியை திருப்பித் தருவதற்கு முன்பாக ஒரு சிறிய பரிகாரத்தை செய்ய வேண்டும். அந்த பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம் .

- Advertisement -

வட்டி கட்ட வேண்டிய பணத்தையோ அல்லது அந்த பணத்தில் இருந்து ஒரு சிறிய தொகையாவது எடுத்துக் கொள்ளுங்கள். அதில் புனுகை தடவ வேண்டும். அடுத்ததாக ஒரு கிழியாத பிரியாணி இலை வேண்டும். அந்த இலையில் யாருக்கு எவ்வளவு கடன் தர வேண்டும் என்பதை எழுத வேண்டும். இதே போல் ஒரு வெள்ளை நிற கவர் வேண்டும். அதன் மேலும் யாருக்கு அந்த வட்டி தொகையை தர போகிறோமோ அவர்களின் பெயரையும் தொகையையும் எழுத வேண்டும். இப்பொழுது அந்த கவருக்குள் புனுகு தடவிய பணத்தை வைத்து விட்டு அதனுடன் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வைத்து மடித்துக்கொள்ளுங்கள்.

அதை நம்முடைய இரண்டு கைகளிலும் வைத்து தெய்வத்திடம் பிரார்த்தனை வைக்க வேண்டும். எனக்கு கடன் கொடுத்தவருக்கு நான் விரைவிலேயே கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று வழிபாடு செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கவரை குலதெய்வத்தின் படத்திற்கு முன்பாகவோ அல்லது இஷ்ட தெய்வத்தின் படத்திற்கு முன்பாகவோ வைத்து விட்டு அந்த பிரியாணி இலையை எரித்து விட வேண்டும். இந்த பணத்தை எடுத்து வட்டி கட்டிவிடலாம். அந்த நேரத்தில் வட்டியை கட்டிவிட வேண்டும். ஒரு வேளை அந்த நேரத்தில் வட்டி கட்ட இயலவில்லை என்னும் பட்சத்தில் அந்த கவரை பூஜை அறையில் வைத்து விடுங்கள். அடுத்த மாதம் வட்டி கட்டும்பொழுது அந்த பணத்தையும் சேர்த்து வைத்து வடிகட்டி விடலாம்.

- Advertisement -

இப்படி நாம் செய்வதன் மூலம் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அருளால் நாம் யாருக்கு எவ்வளவு தொகை கடனாக தர வேண்டி இருக்கிறதோ அவருக்கு அந்த தொகையை விரைவிலேயே திருப்பித் தர முடியும். வட்டி கட்ட வேண்டும் என்ற சூழ்நிலையும் ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: தீராத கஷ்டத்தை தீர்க்கும் சதுர்த்தி வழிபாடு

முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு வட்டி கட்டி காலத்தை கழிக்கும் சூழ்நிலை மாறும். கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்