- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதரித்திரம் நீக்கும் பஞ்சமி தீபம்

தரித்திரம் நீக்கும் பஞ்சமி தீபம்

- Advertisement -

நவம்பர் மாதம் ஆறாம் தேதி முழுவதும் பஞ்சமி திதி என்பது இருக்கிறது. அன்றைய தினத்தில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய இந்த வளர்பிறை பஞ்சமி திதி என்று நாம் செய்யக்கூடிய வழிப்பாடானது நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரத்தை நீக்கி செல்வ வளத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தரித்திரம் நீக்கும் பஞ்சமி தீபம்

பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை பலவிதங்களில் பலரும் வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்யும்பொழுது ஒவ்வொரு பஞ்சமி திதிக்கும் ஒவ்வொரு விதமான பலனை பெற முடியும். ஒரு சிலர் குறிப்பிட்ட வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ எந்தவித வேண்டுதலையும் முன் வைக்காமல் வழிபாடு செய்வார்கள். அப்படி எந்தவித வேண்டுதலையும் முன் வைக்காமல் வழிபாடு செய்பவர்களும், தங்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய தரித்திரம் நீங்கி செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி அன்று வழிபாடு செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது பிரம்ம முகூர்த்த நேரம், காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், மாலை 5:50 மணியிலிருந்து 6:50 மணிக்குள், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள். இந்த நேரத்தில் எந்த நேரம் வசதியான நேரமாக இருக்கிறதோ அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் படத்தை சுத்தம் செய்து வாராகி அம்மனுக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒற்றைப்படை எண்ணிக்கையில் நல்ல உடையாத ஏலக்காயாக பார்த்து ஏலக்காய் மாலையை தயார் செய்து வாராகி அம்மனுக்கு சாற்ற வேண்டும். வீட்டில் வாராஹி அம்மனின் படமோ சிலையோ இல்லை என்பவர்கள் வாராகி அம்மனை நினைத்து தீபம் ஏற்றுவீர்கள் அல்லவா? அந்த தீபத்திற்கு முன்பாக இந்த ஏலக்காயை வைத்து விடலாம். மூன்று நாட்கள் கழித்து இந்த ஏலக்காயை எடுத்து சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது தூபம் போட உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு இந்த பஞ்சமி திதியில் எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல், மாதுளம் பழம், பால், பானகம், தயிர், வேகவைத்த வேர்க்கடலை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைக்கலாம். அடுத்ததாக ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை பயிரை முழுவதுமாக பரப்ப வேண்டும். அதற்கு மேல் கற்பூரவள்ளி இலை ஐந்து எண்ணிக்கையில் பறித்து வந்து அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து அந்த பச்சை பயிரின் மேல் வைக்க வேண்டும். இந்த ஒவ்வொரு இலைக்கும் மேலும் ஒவ்வொரு அகல் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் வட்ட வடிவில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை கற்பூரவள்ளி இலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் வெற்றிலையை பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்த அளவிற்கு கற்பூரவள்ளி இலையை பயன்படுத்துவதே மிகவும் சிறப்பு. இந்த தீபமானது குறைந்தது 48 நிமிடம் ஆவது எரிய வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு வாராகி அம்மனின் மூல மந்திரத்தை 33 முறை கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

ஓம் ச்யாமளாயை ச வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராகி ப்ரசோதயாத்.

மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். தீபம் எரிந்து முடித்த பிறகு ஒரு சொம்பு நிறைய தண்ணீரை எடுத்து தீபத்திற்கு கீழே இருக்கக்கூடிய இலையை எடுத்து அந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும். இந்த தண்ணீரை பத்திரமாக ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து தினமும் காலையில் வீடு முழுவதும் தெறிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டிலிருக்கக் கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பச்சை பயிரை மறுநாள் காலையில் எடுத்துக் கொண்டு போய் அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு தானமாக தந்து விட வேண்டும். இந்த முறையில் வளர்பிறை பஞ்சமி தினத்தன்று நாம் வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மனின் அருளால் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்களும், தரித்திரமும் நீங்குவதோடு பணவரவும், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: பஞ்சமி வழிபாட்டின் பலனை பெற உதவும் தானம்

இந்த எளிமையான அதேசமயம் சக்தி வந்த வாராகி அம்மனின் வழிபாட்டை பஞ்சமி திதியில் முழுமனதோடு செய்பவர்களுக்கு அவர்கள் பிடித்திருந்த தரித்திரம் முற்றிலும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்