- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

ஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

- Advertisement -

கந்த சஷ்டி பெருவிழா என்பது ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும். ஏழாவது நாள் திருக்கல்யாணத்துடன் இந்த திருவிழா நிறைவடையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த காலத்தில் பலரும் ஆறு நாட்களும் தொடர்ச்சியாக தங்களால் இயன்ற அளவு விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அது அவர்களுடைய உடல் சூழ்நிலையை பொறுத்து வைத்துக் கொள்வார்கள். ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் சூரசம்காரம் நடைபெறும் அந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பார்கள். அப்படி இருப்பதன் மூலமும் மூலம் ஆறு நாட்கள் விரதம் இருந்ததற்குரிய பலனை பெற முடியும் என்று கூறப்படுகிறது. அந்த விரதமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு நாள் கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை

அனைத்து முருகன் ஆலயங்களிலும் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுவது தான் இந்த கந்த சஷ்டி திருவிழா. அதிலும் குறிப்பாக ஆறாவது நாள் சூரசம்காரம் என்பது அனைத்து ஆலயங்களிலும் மிகவும் பிரம்மாண்டமாகவே செய்யப்படுகிறது. அன்றைய நாளில் நாம் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் முருகப்பெருமானின் அருளையும் பெற முடியும். அதே சமயம் ஆறு நாட்களும் விரதம் இருந்து வழிபட்டதற்குரிய பலனையும் பெற முடியும். அந்த வழிபாட்டு முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

நவம்பர் மாதம் 7ஆம் தேதி சூரசம்ஹார திருவிழா நடைபெறும். இது கந்தசஷ்டி ஆறாவது நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளிக்க வேண்டும். பிறகு வீட்டையும் சுத்தம் செய்து, பூஜையறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். முருகப்பெருமானுக்கு முன்பாக கிழக்கு பார்த்தவாறு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தங்களிடம் என்ன பொருள் இருக்கிறதோ அந்த பொருளை நெய்வேத்தியமாக முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்துவிட்டு முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை பாராயணம் செய்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

அன்றைய நாள் முழுவதும் தண்ணீரை மட்டும் அருந்திக் கொண்டும் விரதம் இருக்கலாம். பால், பழம் போன்ற திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் விரதம் இருக்கலாம். முழுமையான பலனை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்றைய நாள் முழுவதும் மௌன விரதம் இருக்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன. அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவிட்டு வீட்டிற்கு வரவேண்டும். மாலை நேரத்தில் சூரசம்காரம் என்பது நடைபெறும். சூரசம்ஹாரத்தை பார்த்து முடித்த பிறகு மறுபடியும் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறைக்கு வந்து முருகப்பெருமானுக்கு முன்பாக ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அன்றைய நாளில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை தங்கள் கைகளாலேயே செய்து முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு “ஓம் சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை 308 முறை கூறி முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டிவிடுத்து நெய்வேத்தியமாக வைத்த பொருளை பிரசாதமாக உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:கந்த சஷ்டி நாளில் கோவிலுக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்கள்

இந்த முறையில் ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப்பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும் ஆறு நாட்கள் விரதம் இருந்ததற்குரிய பலனும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்