- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுருகனுக்கு அரோகரா சொல்வதன் காரணம்?

முருகனுக்கு அரோகரா சொல்வதன் காரணம்?

- Advertisement -

நம் இந்து சமயத்தில் பல்வேறு தெய்வங்கள் இருந்தாலும், அரோகரா என்னும் நாமம் ரெண்டு தெய்வத்திற்கு மட்டுமே கோஷமிட்டு பக்தர்களால் சொல்லப்படுகிறது. அரோகரா என்னும் இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் ஆன்மீக காரணம் என்ன? எதனால் இந்த வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது? என்பதையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நோக்கி பயணிப்போம் வாருங்கள்.

எவ்வளவோ தெய்வங்கள் இருந்தும், “அரோகரா” என்னும் இந்த முழக்கம் முருகன் மற்றும் அண்ணாமலையாருக்கு மட்டுமே சொல்லுகிறோம். “அர ஹரோ ஹரா” என்னும் வாக்கியத்தின் சுருக்கமே “அரோகரா” ஆகும். கடவுளே எங்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய துயரங்களை விலக்கி, நன்மைகளை செய்து அருள வேண்டும் என்பது தான் இதன் அர்த்தம் ஆகும். துன்பம் நீக்க ஓடி வா.. என்று அழைப்பதை தான் “அரோகரா” என்று மனம் நிறைந்து, வாய் நிறைய சத்தமாக கோஷம் போட்டு சொல்லுகிறோம்.

- Advertisement -

இந்த “அரோகரா” என்னும் வார்த்தையை பயன்படுத்தியவர் “திருஞானசம்பந்தர்”. எவர் ஒருவர் மனம் உறுகி “அரோகரா” என்று சொல்லிக் கொண்டே கடவுளை நோக்கி பயணம் செய்கிறானோ, அவனுக்கு வந்த துன்பங்கள் எல்லாம் வந்த வழியே சென்று விடும். “அரோகரா” சொல்லும் பொழுது சுற்றி இருப்பவர்களை நாம் கண்டு கொள்வதில்லை. நம் மனம் எதைப் பற்றியும் நினைக்காமல் கடவுளே சரணாகதி என்று தான் அந்த வார்த்தையை உச்சரிக்கும்.

“அர்” என்றால் தமிழில் சிவப்பு என்று அர்த்தம். சிவந்த முகம் மற்றும் கரங்களை உடைய இறைவனை குறிப்பிடுவது போல் இந்த வார்த்தை அமைந்துள்ளது. சிவந்த முகம் மற்றும் கரங்களைக் கொண்ட முருகனுக்கு அரோகரா என்று சொல்வதும் இதனால் தான் போலும். திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாருக்கும் “அரோகரா” சொல்லி பக்தர்கள் வழிபடுவார்கள்.

- Advertisement -

“அரோகரா” என்று கண்களை மூடிக் கொண்டு சொல்லுகையில் இறைவனை மனதால் உணர முடிகிறது. இப்படி இறைவனை உணர்ந்து துன்பம் தீர்க்க ஓடி வா.. என்று கூப்பிடும் பொழுது இறைவன் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வந்து விடுகிறார் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. நம்மை பின்தொடரும் கஷ்டங்கள், கவலைகள், துன்பங்கள், ஊழ்வினைகள், கர்மங்கள் அனைத்தும் வேரோடு அறுந்து போக செய்யும் அற்புத மந்திரமாகும்.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்களும் முருகனுக்குள் அடக்கம் என்பதால் தான் முருகனை “அரோகரா” என்று சொல்லி அழைக்கிறோம். கிரிவலம் வரும் பொழுதும் “அரோகரா” என்று சொல்லி ஈசனை பக்தர்கள் அழைப்பார்கள். முருகனை வழிபடும் பொழுதும், வேண்டுதல்களை நிறைவேற்றும் பொழுதும் நம்மை அறியாமல் நமக்குள் வரும் முதல் வார்த்தை “அரோகரா” ஆகும்.

இதையும் படிக்கலாமே:
வளமான வாழ்வு பெற வளர்பிறை அஷ்டமி திதி
இந்த “அரோகரா” என்னும் மந்திரத்தை கணக்கில்லாமல் உங்கள் மனதில் இறைவன் நிலை கொள்ளும் வரை சொல்லிக் கொண்டே இருங்கள். முருகன் கண்டிப்பாக உங்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் அவரை உணரும்படி செய்வார். முருகரை ஒரு முறை உணர்ந்து விட்டாலே போதும், எப்பேர்ப்பட்ட கவலையும் உங்களை விட்டு நீங்கிவிடும். மன பயம், மன சஞ்சலம், மன இறுக்கம் போன்றவற்றிலிருந்து விடுபட “அரோகரா” என்னும் கோஷத்தை சத்தமாக முழங்கி முருகனை வழிபட்டு பாருங்கள்.

சற்று முன்