இன்று நவம்பர் 8ம் தேதி இரவு 8:22க்கு அஷ்டமி திதி என்பது ஆரம்பிக்கிறது. அதனால் இரவு அஷ்டமி என்பது இன்றைய நாளில் தான் வருகிறது. இந்த அஷ்டமி திதி வரும் நாளில் கால பைரவர் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அதேபோல்தான் வாராகி அம்மனின் வழிபாடும் நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளையும் எதிர்மறை ஆற்றல்களையும் விலக்கும் என்றும் புதிதாக எந்தவித தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் நம்மை வந்து சேராது என்றும் கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எதிர்மறை ஆற்றலை விலக பரிகாரம்
அஷ்டமி திதி என்பது எதிர்மறை ஆற்றல்களை விலக்கக்கூடிய திதியாக கருதப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்கள் மட்டும் அல்லாமல் பிறரால் செய்யக்கூடிய தீய வினைகள், தீய சக்திகள் எதுவாக இருந்தாலும் அவை நம்மை விட்டு விலகிச் செல்வதற்கு அஷ்டமி திதியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதே போல் யாரேனும் தீங்கு செய்ய வேண்டும் என்று நினைத்து ஏதாவது செய்கிறார்கள் என்றால் அதை இந்த அஷ்டமி திதியில் தான் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் அப்படி செய்யக்கூடிய எந்த செயல்களும் நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு அஷ்டமி திதியில் நாம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இரவு படுக்கச் செல்வதற்கு முன் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணாடி டம்ளர் இல்லாத பட்சத்தில் எச்சில் படாத டம்ளராக ஒரு டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளர் நிறைய தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் ஒன்பது மிளகை போட வேண்டும். பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லத்தைப் போட வேண்டும். வெல்லம் இல்லாத பட்சத்தில் நாட்டுச்சர்க்கரை போடலாம். பிறகு வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது இரண்டு பூக்களை அதன்மேல் போட வேண்டும். இந்த டம்ளரை எந்த இடத்தில் நாம் படுத்து உறங்குவோமோ அந்த அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும்.
இவை அனைத்தையும் செய்யும்பொழுது மனதிற்குள் வாராகி அம்மனின் பெயரை உச்சரித்துக் கொண்டே செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுநாள் காலையில் எழுந்து இந்த தண்ணீரை தெய்வீக விருட்சமாக கருதப்படும் வேப்பமரம், வில்வமரம், ஆலமரம், அரசமரம், வன்னி மரம் போன்ற மரங்களின் அடியில் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலகும். புதிதாக எந்தவித எதிர்மறை ஆற்றலாலும் நமக்கு பாதிப்புகள் ஏற்படாது. நிம்மதி உண்டாகும். வாழ்க்கையில் இருக்கக் கூடிய எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினைகள் விலகுவதற்குரிய வழி நமக்கு கிடைக்கும். கஷ்டங்களும், ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களும், அந்த தோஷங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் நீங்கும் என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
இதையும் படிக்கலாமே:சனி மகா அஷ்டமி வழிபாடு
இந்த எளிமையான தண்ணீர் பரிகாரத்தை அஷ்டமி திதி இரவில் செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்