தெய்வ வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வ வழிபாட்டை நிறைவு செய்யும் விதமாக தூப தீப ஆராதனை காட்டும் வழக்கம் என்பது இருக்கும். இது ஆலயங்களிலும் நடைபெறும், அதே சமயம் வீட்டில் செய்யக்கூடிய வழிபாடுகளிலும் நடைபெறும். இதில் முதலிடம் பிடிக்கக் கூடியது தூபம். தூபம் என்று பார்க்கும் பொழுது சாம்பிராணி தூபமும் இருக்கிறது, ஊதுபத்தி தூபமும் இருக்கிறது. எந்த தூபத்தை நாம் வீட்டில் போட்டாலும் அந்த தூபத்தின் பலனால் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தூபத்தில் நாம் சேர்க்கக்கூடிய பொருட்களால் நமக்கு பணவரவு அதிகரிக்கும் என்றும் கடன் பிரச்சினை தீரும் என்றும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த இந்த தூபத்தை செவ்வாய்க்கிழமை ஏகாதசி அன்று எப்படி காட்டினால் தீமைகள் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்கள் இரண்டு ஊதுபத்தியாவது பொருத்தி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு முக்கியமான காரணமாக சில காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று இந்த ஊதுபத்தியிலிருந்து வரக்கூடிய புகையானது நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை உண்டாக்கும் என்றும், வீடு நறுமணமாக திகழும் என்றும், அவ்வாறு நறுமணம் நிறைந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் கண்டிப்பான முறையில் ஊதுபத்தி ஏற்றி வைக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஊதுபத்தியை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த தாந்திரீக பரிகாரத்தை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு ஒரே ஒரு ஊதுபத்தி வேண்டும். மஞ்சள் தூள் வேண்டும். நெய் வேண்டும். பச்சை கற்பூரம் அல்லது ஜவ்வாது அல்லது ஏலக்காய் தூள் இவை மூன்றில் ஏதாவது ஒன்று வேண்டும். இப்பொழுது சிறிதளவு மஞ்சள் துளை எடுத்து அதனுடன் வாசனை பொருட்களாக திகழக்கூடிய பச்சை கற்பூரம், ஜவ்வாது, ஏலக்காய் தூள் இவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு கலந்து அதில் நெய் ஊற்றி பேஸ்ட் ஆக தயார் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பேஸ்டை நம்முடைய ஆள்காட்டி விரலை பயன்படுத்தி ஊதுபத்தியில் தடவ வேண்டும். சிறிது நேரம் அதை உலர விட்டு பிறகு எப்படி நாம் தெய்வங்களுக்கு ஊதுபத்தி தூபம் காட்டுவோமோ அதே போல் பொருந்தி ஊதுபத்தி தூபம் காட்ட வேண்டும்.
இந்த தூபத்தை வீட்டு நிலை வாசலில் இருந்து வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மூலை முடுக்குகள் அனைத்திலும் காட்ட வேண்டும். இப்படி காட்டி முடித்த பிறகு இந்த ஊதுபத்தியை பூஜை அறையிலோ, படுக்கை அறையிலோ அல்லது ஹாலிலோ வைத்துவிடலாம். இதில் இருக்கக்கூடிய பொருட்களுடன் சேர்த்து நாம் ஊதுபத்தி தூபம் காட்டும் பொழுது நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதோடு நமக்கு நன்மைகள் உண்டாகும். மேலும் நமக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் அனைத்தும் தீர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: சஷ்டி கவசம் படிப்பதன் பலன்கள்
மிகவும் எளிமையான இந்த ஊதுபத்தி பரிகாரத்தை முழுமனதோடு எந்தவித ஐயமும் இன்றி செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.