சிவபெருமானுக்கு உகந்த எந்த ஒரு நாளாக இருந்தாலும் அது முருகப்பெருமானுக்கும் உகந்த நாளாகவே கருதப்படும். இதற்கு காரணம் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்துதான் முருகப்பெருமான் தோன்றினார் என்பதுதான். சிவபெருமானுக்கு உகந்த தினமாக கருதக்கூடிய ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று முருகப்பெருமானையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானின் ஆலையத்திலும் பல சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். அப்படிப்பட்ட நாளில் வீட்டிலேயே எந்த முறையில் தீபம் ஏற்றி முருகப் பெருமானை வழிபட்டால் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
கடன் பிரச்சினை தீர்க்கும் பௌர்ணமி தீபம்
கடன் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதை சரி செய்வதற்கு நமக்கு முருகப்பெருமானின் அருள் என்பது வேண்டும். ஏனென்றால் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைக்கும் காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதியாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்பதால் முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய கடன் பிரச்சினைகள் தீரும் என்பதுதான்.
பலரும் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காக செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அதைவிட நவம்பர் மாதம் 15ஆம் தேதி ஐப்பசி மாதம் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று இந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முருகப்பெருமானுக்கு ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபட்டோம் என்றால் நம்முடைய கடன் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த பௌர்ணமி தினத்தன்று மூன்று நட்சத்திரங்கள் வருகின்றன. பகல் 12:12 வரை அஸ்வினி நட்சத்திரம் இருக்கிறது, பிறகு இரவு 10:48 வரை பரணி நட்சத்திரம் இருக்கிறது, அதற்கு பிறகு கார்த்திகை நட்சத்திரம் இருக்கும். இந்த மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று செவ்வாய் ஹோரையில் தீபம் ஏற்ற வேண்டும்.
வெள்ளிக்கிழமை செவ்வாய் ஹோரை என்பது மதியம் 11 மணியிலிருந்து 12 மணி வரை இருக்கிறது. அதேபோல் மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை இருக்கிறது. இந்த இரண்டு நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து அந்த ஒரு மணி நேரம் முழுவதும் தீபம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனை முழுவதும் தீர வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி அந்த செவ்வாய் ஹோரையில் தீபம் ஏற்றி ஒரு மணி நேரமும் தொடர்ச்சியாக அந்த தீபம் எரிவதன் மூலம் முருகப்பெருமானின் அருளாலும், அதேசமயம் செவ்வாய் பகவானின் அருளாலும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனை முற்றிலும் தீரும்.
இதையும் படிக்கலாமே: பௌர்ணமி ஸ்வஸ்திக் வழிபாடு
எவ்வளவு பரிகாரம் செய்தும் எவ்வளவு முயற்சிகள் செய்தும் கடன் அடையவில்லை என்று கவலைப்படுபவர்கள் இந்த முறையில் இந்த நேரத்தில் முருகப்பெருமானுக்கு தீபமேற்றி வழிப்பட அவர்களுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.